திரைச்செய்திகள்

ஏவிஎம் தயாரிப்பில் பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த படம் ’முந்தானை முடிச்சு’. சினிமாக்களில்‘எப்பவேணாலும் பாக்கலாம், எத்தனை தடவை வேணாலும் பாக்கலாம்’ என்று ரசிகர்கள் இன்றைக்கும் கொண்டாடுகிற படங்களில், ‘முந்தானை முடிச்சு’க்கு தனியிடம் உண்டு.

இந்தப் படத்தின் கதைக்காக திருப்பதியில் ரூம் போட்டு டிஸ்கஷன் செய்யப்பட்டது. அந்த டிஸ்கஷனில் எழுத்தாளர் பாலகுமாரனும் கலந்துகொண்டு, பணியாற்றினார். தனது முன்கதைச்சுருக்கம் எனும் பயாகிரபி நூலில், இதைக் குறிப்பிட்டிருக்கிறார் பாலகுமாரன்.

அடுத்து... இந்தக் கதைக்கு சின்னவீடு என்று டைட்டில் சொன்னார் பாக்யராஜ். ‘கதை நல்லாருக்கு. டைட்டிலும் நல்லாருக்கு. வேற ஏதாவது சொல்லுங்களேன்’ என்றது ஏவிஎம். ‘ அடுத்து ஒரு சொந்தப்படம் எடுக்கறேன். அந்தப் படத்துக்கு ஒரு டைட்டில் வைச்சிருக்கேன். அதைத்தரேன்’னு பாக்யராஜ் சொல்ல... அதுதான் ’முந்தானை முடிச்சு’. டைட்டில் பிரமாதம் என்று ஏற்கப்பட்டது.

இதை எல்லாம் விட சிறப்பம்சம், ’இந்த முந்தானை முடிச்சு என் படம்’, ‘இது என் கதை’ என்றெல்லாம் அறிவிக்கப்பட்டு வழக்கெல்லாம் போடப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற முருங்கைக்காய் வசனம் 37 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை புகழ் பெற்று நிற்பது பாக்கியராஜின் வெற்றிக்கு உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது

இந் நிலையில் இந்த படத்தின் ரீமேக்கை கே.பாக்யராஜ் உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. புது ’முந்தானை முடிச்சு’ ரீமேக் படத்தில் பாக்கியராஜ் உடன் பிரபல ஹீரோ சசிகுமார் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்த கோர விபத்தால் உதவி இயக்குநர் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.