திரைச்செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முடக்கப்பட்ட பொருளாதாரம், அதன் வீழ்ச்சி என்பன தரக் கூடிய தாக்கம் என்பவற்றுடன், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சில நன்மையாக அமையினும், பல மாற்றங்கள் மிகுந்த சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

அவ்வாறான பெரும் தாக்கமொன்றினை நிகழ்த்தக் கூடியதாக இருக்கிறது தமிழ்ச் சினிமா உலகம். திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையம்வழியான ஒளிபரப்புத் தளங்கள் கவனம் பெற்றுள்ளன. வரும் வாரத்தில் அவ்வாறான தளங்களினூடாக குறைந்தது ஏழு திரைப்படங்கள் முதற்கட்டமாக வெளிவரவுள்ளன. இதிலே பலரும் குறிபிட்டது ஜோதினா நடித்துள்ள "பொன்மகல் வந்தாள் ". சில தினங்கள் முன்னதாக அதன் திரைமுன்னோட்டம் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பினையும் உருவாக்கியுள்ளது.

இதேவேளை இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் Climax படத்தின் முன்னோட்டமும் வெளியாகியுள்ளது. அதன் காட்சிகள் இணையத்தில் வரவுள்ள எதிர்கால சினிமாக்கள் குறித்த, முன்னோட்டமாகவே இருக்கின்றன. திரையரங்குகளுக்கு வரும் சினிமாக்கள் கடுந் தனிக்கைக்கு உள்ளாகி வருவன. ஆனால் இணையவெளிச் சினிமாவிற்கு இவ்வாறான தணிக்கைகள் எதுவும் இல்லாத நிலையில், அது சமூகத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் அச்சம் தருபவையாகவே உள்ளன சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

யதார்த்தம் எனும் போர்வையில் எழும் கருத்துச் சுதந்திரம் எவ்வாறான நிலையைத் தோற்றுவிக்கப்போகிறது..?

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது