திரைச்செய்திகள்

சிவாஜியுடன் போட்டி போட்டு அற்புதமாக நடிப்பதில் புகழ்பெற்றவர் வாணிஸ்ரீ. ‘ஃபெஷன் ஸ்டார்’ என்று கொண்டாடப்பட்ட இவரது கொண்டை ஸ்டைலும் ‘வாணிஸ்ரீ கொண்டை’ என்று கொண்டாடப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் இவர் இணைந்து நடித்த வசந்தமாளிகை படம் வெள்ளி விழா கொண்டாடியது.

வாணிஸ்ரீ சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றபின் பெங்களூருவிலும் ஹைதராபாத்திலும் சி.பி.எஸ்.சி பள்ளிகளை சொந்தமாக நடத்தி வருகிறார். ஆனால் சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகன் பெயர் அபினவ் வெங்கடேஷ் கார்த்திக் (வயது 36). இவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரியில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் டாக்டர். இவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லுாரியில் பணிபுரிகிறார்.

டாக்டர் அபினவ் கடந்த 2 மாதங்களாக கொரோனா லாக்டவுனால் சென்னைக்கு வரமுடியாமல் பெங்களூருவில் தனது தந்தையுடன் வசித்து வந்தார். தற்போது லாக்டவுன் தளர்த்தப்பட்டதையடுத்து நேற்று காலையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தார். வீட்டில் மனைவி, குழந்தைகளை பார்க்க ஆவலாக இருந்த அவர் கொரோனாவால் நேராக வீட்டுக்கு செல்லாமல் திருக்கழுக்குன்றத்தில் உள்ள வீட்டில் தங்கி தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்நிலையில் இன்று காலையில் அவர் திடீரென தனது வேட்டியால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிய வருகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குடும்பப்பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேநேரம் இது கொலையாகவும் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருவதாக குற்றச் செய்தி சேகரிப்பு வட்டாரச் செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் ரோபோ சங்கர்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.