திரைச்செய்திகள்

கமல்ஹாசன் சென்னையில் புதிதாக கட்டப்பட்ட தனது ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலக வாசலில், சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் உருவச்சலையை திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், கமலை புகழ்ந்து பேசினார்.

அதன்பின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வந்தன. கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக கமல் - ரஜினி இணையும் படம் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. சம்பளம் உள்ளிட்ட பல விஷயங்களில் சிக்கல், கமல் படத்தில் ரஜினி நடிப்பதை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை என்று காரணங்கள் கூறப்பட்டன.

ராஜ்கமல் பிலிம்ஸின் 48-வது படமாக ‘தலைவன் இருக்கிறான்’ (தேவர் மகன் இரண்டாம் பாகம்) படத்தை தயாரித்து, நடித்து, கமல் இயக்க போகிறார் என்று அவரது அலுவலக தலைமை நிர்வாகி உறுதிப்படுத்தி இருந்தார். அதில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என்பதும் உறுதியான. அதையடுத்து இண்ஸ்டாம்கிராம் வழியாக விஜய்சேதுபதி கமலைப் பேட்டியெடுத்ததும் வைரலானது. அடுத்து 49-வது படமாக சிறிய பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் ‘ராஜ்கமல் பிலிம்ஸின் 50-வது படமாக ரஜினி நடிக்கும் படத்தை கமல் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார். இதை தனது கனவு படமாக கருதும் கமல், இதுபற்றி ரஜினியிடம் விரிவாகப் பேசிக் கதை சொல்லியிருக்கிறார். ஏற்கனவே அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு கமலுக்கு ரஜினி கால்ஷீட் கொடுக்க உத்தேசித்திருக்கிறார் என்று தற்போது தெரியவந்துள்ளது. ரஜினியின் ‘தில்லு முல்லு’ படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்தது போல், இந்தப்படத்திலும் கமல் கவுரவ வேடத்தில் நடிப்பார் என்ற தகவல் கமல் - ரஜினி ஆகிய இருதரப்பிலும் உலவிக் கொண்டிருக்கிறது. ரஜினி தரப்பில் இதுபற்றி கேட்டால் மௌனமே பதிலாக வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் ரோபோ சங்கர்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.