திரைச்செய்திகள்

ரஜினியின் தர்பார் படத்துக்குப்பின் அண்ணாத்தயில் நடித்துவரும் நயன்தாராவின் நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது நடித்துவரும் இரண்டு படங்கள், தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு கதை’ மற்றும் மிளிந்த் ராவ் இயக்கத்தில் நெற்றிக் கண் ஆகியவை.

இவற்றில் நெற்றிக்கண் நயன்தாராவின் 65 வது படம். இந்தப் படத்தை, ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார். தற்போது இந்தப் படத்தின் படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் படம் குறித்த சில சுவாரஸ்யமான விவரங்களையும் அதில் நயன்தாராவின் கதாபாத்திரத்தையும் தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் தங்கையும் நடிக்க வந்தார் !

படத்தில் அதிரடி காட்சிகள் அதிகம் என்றும், ஆக்‌ஷன் சூப்பர் ஸ்டாராக நயன்தாரா முதல் முறையாகத் தோன்றும் படம் இது என்று கூறியிருக்கிறார். மேலும் இதுவரை இல்லாத நம்பர் 1 த்ரில்லர் படமாக இது இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். தற்போது படத்தின் 60 சதவீத சூட்டிங் முடிந்துவிட்டது என்பதையும் தெரிவித்துள்ள அவர், படத்தில் நயன்தாரா ஆக்‌ஷன் அவதார் பற்றிப் பேசுகையில், “அதிரடி ஆக்ஷன் நாயகியாக நயன்தாரா இதில் புதிய முகம் காட்டுகிறார். அவர் நிகழ்த்திய அதிரடி காட்சிகள் பார்வையாளர்களைக் கவரும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெற்றிக்கண் முதல் தோற்றத்தில் ரத்தம், கைவிலங்கு மற்றும் சவுக்கு ஆகியவை இடம் பெற்றுள்ளன. படத்தின் தலைப்பு பிரெயில் எழுத்தாக அச்சாகியிருகிறது. இது வரவிருக்கும் த்ரில்லரில் நயன்தாராவின் கதாபாத்திரம் பார்வையற்ற மாற்றுத் திறனாளியா என பலருக்கும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.