திரைச்செய்திகள்

கோரோனா தொடங்கியது முதலே நிறைய உதவிகளை செய்து வந்தார் ராகவா லாரன்ஸ். சுமார் 3 கோடி அளவுக்கு உதவிகளை நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்தார்.

அதேபோல் நலத்திட்ட உதவிகளுடன் ‘சந்திரமுகி 2’ படத்தின் செய்தியை இணைத்து அறிவித்து அந்தப் படத்துக்கு விளம்பரம் தேடியனார் எனவும், தாம் 3 கோடிக்குச் செய்வதாகச் சொன்ன உதவிகளுக்கு லாரன்ஸ் ஆதரம் காட்டுவாரா என்றும் பலர் பிரச்சினையைக் கிளப்பி வந்தார்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது வேலைகளைச் செய்து வந்தார் ராகவா லாரன்ஸ்.

இந்நிலையில் சென்னை வடபழனியை ஒட்டிய அசோக்நகரில், அப்பகுதியில் காவல் நிலையம் அருகாமையில் ராகாவா லாரன்ஸின் வீடும் அவர் நடத்திவரும் ஆதரவற்றோர் இல்லமும் உள்ளன. அவரது ஆதரவற்றோர் இல்லத்தில் தற்போது கொரோனா நுழைந்துவிட்டது.

ஆக்‌ஷன் சூப்பர் ஸ்டார் ஆனார் நயன்தாரா !

சென்னை அசோக்நகரில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தி வந்த ஆதரவறறோர் தங்கும் விடுதியில் தங்கியிருந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10- மாணவிகள், 5- மாணவர்கள், 3 - பணியாளர்கள், 2 - சமையல்காரர்கள் என தொற்று உறுதியான அனைவரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விடுதியை மூடும் பணியில் சுகாதாரதுறை அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர். அங்கிருக்கும் மற்ற ஆதரவற்றோரை பூந்தமல்லியில் உள்ள லாரன்ஸின் மற்றொரு இல்லத்துக்கு இன்று மாலையே இடம்மாற்றிவிட்டார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

;

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

நடிகர், நடிகைகளுக்கு யோகா ஆசிரியை ஆக இருந்த அனுஷ்காவை ஒரு நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் உருவாக்கிய படம் கடந்த 2009-ம் ஆண்டு

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.