திரைச்செய்திகள்

திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிடுவது தொடர்பான நிலைப்பாடு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் காப்பதற்காக ஒரு அணியாக உருவாகியுள்ளார்கள்.  இந்த அணி, தமிழ்த்திரையுலகின் அனைத்துத் தரப்பினரும் நலன் பெறும் வகையில் சில யோசனைகளை முன்மொழிந்திருக்கிறது.

திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள், அதனை வெளியிடும் வினியோகஸ்தர்கள், அதனை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், ஆகிய அனைவருக்கும் நன்மையுடன் கூடிய லாபம் கிடைக்க நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி. சில நடை முறை சீர்திருத்தங்கள் கொண்டு வந்து நாம் அனைவரும் பயனடைய வேண்டி கீழ் கண்ட நிலைப்பாடு.

(1) சிறு மூதலீட்டு படங்களுக்கு திரையரங்குகளில் ஒரு காட்சி மட்டுமே என்ற நிலை மாறி குறைந்த பட்சம் நூறு திரையரங்குகளில் மூன்று காட்சிகள் திரையிட வேண்டும்.

(2) க்யூப், யூ எப் ஓ போன்ற டிஜிட்டல் புரெஜெக்ஷன் வி.பி,எப். கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்களே செலுத்த வேண்டும்.

(3) எல்லா திரையரங்குகளிலும் ஆன்லைன் டிக்கெட் மூலம் வரும் வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பங்கு கொடுத்திட வேண்டும்.

(4) திரையரங்குகளில் படம் ஓடி முடித்தவுடன் அந்த படத்தை திரையிட்ட தயாரிப்பாளருக்கோ / வினியோகஸ்தருக்கோ உடனுக்குடன் அவருடைய விகிதாசார பங்கினை வழங்கிட வேண்டும்.

(5) தியேட்டர் வாடகையை 50 சதவிகிதம் வரை குறைத்து வசூலிக்க வேண்டும்.

(6) அனைத்து திரையரங்குகளையும் கணிணி மயமாக்கி வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்

(7) திரையரங்கில் ஒளிபரப்பபடும் விளம்பர வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும்.

(8) தமிழ் திரைப்படங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். திரைப்படம் வெளியிடும் போது கன்ஃபர்மேசனை சிண்டிகேட் அமைத்து கன்ஃபார்ம் செய்யகூடாது..

(9) ஜெனரேட்டர் சார்ஜ் வாங்குவதை தவிர்க்க வேண்டும்

(10) தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அடங்கிய குழு ஏற்படுத்தி இரு சாராரும் அவ்வப்பொழுது நிகழும் சம்பவங்களை கலந்து பேசி நிறைகளை நிறைவேற்றி, குறைகளை களைய வேண்டும்.

மேற்கண்ட புதிய மாற்றங்களை கொண்டு வந்து திரையுலகில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் பாதிப்படையாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் அணியின் நிலைப்பாடு.

என்றும் நட்புடன்,

இராம, நாராயணன் முரளி என்கிற N.இராமசாமி
R.ராதா கிருஷ்ணண்
S.சந்திரபிரகாஷ் ஜெயின்
ராஜேஷ் (கே.ஜே.ஆர்)
மைக்கேல் ராயப்பன்
N.சுபாஷ் சந்திரபோஸ்.
தயாரிப்பாளர்களின்
மற்றும்
செயற்குழு உறுப்பினர் வேட்பாளர்கள்

தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து