திரைச்செய்திகள்

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

இந்தப் படத்தில் கோஷியாக ப்ரித்விராஜும் அய்யப்பான பிஜு மேனனும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள். ராணுவத்தில் 14 ஆண்டுகள் சேவை முடித்துத் திரும்பிய குரியன் கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்த கோஷியும், கேரளமும் தமிழகமும் சந்திக்கும் எல்லைப் பகுதியான அட்டப்பாடி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அய்யப்பனும் எதிர்பாராத சூழ்நிலையில் மோதிக்கொள்ளும் ஈகோ யுத்தத்தால் விளையும் போராட்டங்களே திரைக்கதை.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் சசிகுமார் - ஆர்யா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். அய்யப்பனாக சசிகுமாரும் கோஷியாக ஆர்யாவும் நடிக்க இருக்கிறார்கள். இதில் கதாநாயகி கிடையாது. தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

நடிகர், நடிகைகளுக்கு யோகா ஆசிரியை ஆக இருந்த அனுஷ்காவை ஒரு நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் உருவாக்கிய படம் கடந்த 2009-ம் ஆண்டு

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.