திரைச்செய்திகள்

திரைக்கதை மன்னன் என்று போற்றப்படுபவர் இயக்குனர் சசி. அவரது எழுத்து வண்ணத்தில் உருவாகி கடந்த 2016-ல் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். சுமாரான வெற்றிகளே கொடுத்துக்கொண்டிருந்தார் விஜய் ஆண்டனிக்கு பிச்சைக்காரன் பிளாக்பஸ்டர் வெற்றியானது.

தெலுங்கிலும் இந்தப் படம் 75 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால் அந்த படத்திற்கு பின் விஜய் ஆண்டனிக்கு அப்படி ஒரு வெற்றி மீண்டும் கிடைக்கவில்லை. விஜய் ஆண்டனியும் “பிச்சைக்காரன் வெற்றி ஒன்று போதும் நான் இன்னும் 25 வருடங்களுக்கு திரையுலகில் வலம்வர அந்த ஒரு படம் எனக்குக் கை கொடுக்கும்” என்று அவர் பங்கேற்கும் எல்லா சினிமா நிகழ்ச்சிகளிலும் பெருமையாக கூறிக்கொண்டு இருந்தார்.

சசிகுமார் - ஆர்யா புதிய கூட்டணி !

தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள தமிழரசன் படம் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது. அந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கோரோனா ஊரடங்கு முடிந்ததும் அந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் விஜய் ஆண்டனி தனது மொத்த சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளார். இதனால் விஜய் ஆண்டனியின் கால்ஷீட்டுக்காக பலர் தவம் கிடக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, தற்போதைய சூடான செய்தி சசி - விஜய் ஆண்டனி இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என்பது. பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இந்த கூட்டணி மீண்டும் தொடங்குகிறது. ஆனால், இம்முறை சசி பிச்சைக்காரன் 2 படத்திற்கு திரைக்கதை மட்டும் எழுதிக் கொடுக்கிறார். கதை எழுதி நடிக்க இருப்பவர் விஜய் ஆண்டனி. சசி வேறுசில ஒப்புக்கொண்ட படங்களில் பிசியாக இருப்பதால் இந்த படத்தை வேறொரு இயக்குனரை கொண்டு இயக்க இருப்பதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.