திரைச்செய்திகள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்தப் படத்தை ஏழு கிரீன் நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் லலித் தயாரிக்கிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் தொடங்க இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி சமந்தா இடையிலான காட்சிகளை மே மதம் படம் பிடித்து விடலாம் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.

தற்போது சமந்தாவின் கால்ஷீட்டும் தீர்ந்துவிட்டது. இதனால் ஜூலை மாதம் படப்பிடிப்பை தொடங்க சமந்தாவிடம் மீண்டும் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். ஆனால் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா, ‘ஹைதராபாத்தில் படப்பிடிப்பை வைத்துக் கொள்வதாக இருந்தால் கால்சீட் தரலாம்’ என்று கண்டிப்பாக கூறி விட்டாராம்.

கௌதமிக்குப் பதிலாக கமலின் தேர்வு !

விக்னேஷ் சிவன் இந்தப் படத்துக்காக மிக அழகான ஒரு வீட்டை பிரசாத் ஸ்டுடியோவில் செட் போட்டுள்ளார். இதை நாகசைதன்யா விடம் கூறியும் அதை அவர் ஏற்றுக்கள்ள மறுத்து விட்டாராம். தற்போதுள்ள சூழ்நிலையில் சமந்தாவை சென்னைக்கு அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாக கூறிவட்டாராம். இது சம்பந்தமாக நயன்தாராவிடமும் நாக சைதன்யா கண்டிப்பாக கூறிவிட்டாராம். இதனால், சென்னையில் எப்போது கரோனாவின் பாதிப்பு குறைவது எப்போது படப்பிடிப்பை தொடங்குவது என்று விழிபிதுங்கி நிற்கிறது விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி.

மீண்டும் இணைகிறது விஜய் ஆண்டனி - இயக்குநர் சசி வெற்றிக் கூட்டணி !

இதற்கிடையில் தயாரிப்பாளர் லலித், ‘விஜய்சேதுபதி - நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை ஜூலை மாதம் சென்னையில் படம் பிடித்து விடும்படி’ கேட்டுக் கொண்டிருக்கிறாராம். இந்த தயாரிப்பாளர் தான் விக்ரம் நடித்த வரும் கோப்ரா படத்தையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப்படம் 60% படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ரஷ்யாவில் நடந்துவந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட சியான் உள்ளிட்ட படக்குழுவினர் நாடு திரும்பியது நினைவு கூறத் தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் ரோபோ சங்கர்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.