திரைச்செய்திகள்

கொரோனா ஊரடங்கில் ஆடை வடிவமைப்பாளர் சத்யாவுடன் சசிகுமார் ஜூம் நேரலைக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது சசிகுமாரிடம் சில பிரபலங்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது பாக்யராஜின் மகனும் நடிருமான சாந்தனு உருப்படியான கேள்வி ஒன்றைக் கேட்டார். அது என்ன? கேள்வியையும் பதிலையும் தொடர்ந்து வாசியுங்கள்.

சாந்தனு: 'சுப்பிரமணியபுரம் 2' எப்போது நடக்கப் போகிறது? அதில் நடிக்க வாய்ப்பு வேண்டும். 'சுப்பிரமணியபுரம்' நான் மிஸ் பண்ணிய ஒரு படம். அந்தப் படத்தை தவறவிட்டத்துக்கு ரொம்பவே வருந்துகிறேன். கண்டிப்பாக 2-ம் பாகத்தை மிஸ் பண்ண மாட்டேன். அந்தப் படத்தில் 80-ம் ஆண்டு காட்சிகளுக்காக ரொம்பவே டீட்டெயில் பண்ணியிருந்தீர்கள்.

சமந்தாவை அனுப்ப மறுத்த நாகசைதன்யா !

சசிகுமார்: 'முந்தானை முடிச்சு' படத்தில் பாக்யராஜ் சார் கேரக்டரில் நான் நடிப்பது மகிழ்ச்சி. உங்களுடைய 3 படங்கள் பண்ணனும் என ஆசை என்றேன். அதில் ஒன்று திட்டமிட்டு, நடக்கவில்லை. 'முந்தானை முடிச்சு' ரீமேக் சரியாக அமைந்தது.

'சுப்பிரமணியபுரம் 2' பண்ணுவதற்கு எல்லாம் அப்போதிலிருந்தே விருப்பம் இல்லை. ஒரே ஒரு 'சுப்பிரமணியபுரம்' தான் என்று முடிவு பண்ணிய விஷயம். 2-ம் பாகம் எடுத்தால் இப்படியெல்லாம் போகும் அல்லவா என்று விளையாட்டுக்குப் பேசியிருக்கோம். 'சுப்பிரமணியபுரம்' 2-ம் பாகம் என்பது எண்ணத்திலேயே இல்லை. ரீமேக் பண்ணுவதற்குக் கூட விருப்பமில்லை. இந்தியில் பண்ணலாம் என நினைத்தேன். அதையும் விட்டுவிட்டேன்.

கௌதமிக்குப் பதிலாக கமலின் தேர்வு !

இன்னொரு படம் பண்ணுவேன். அதில் கண்டிப்பாக சாந்தனுவுக்கு ஒரு கேரக்டர் இருக்கும். லைவ்வில் சொல்லிவிட்டதால் அது உண்மையாக நடக்கும். 'சுப்பிரமணியபுரம்' படத்தில் என் கேரக்டர் அல்லது அழகர் கேரக்டர் இரண்டில் எதிலாவது ஒன்றில் சாந்தனுவை நடிக்க வைக்கத் திட்டமிட்டேன். முதலில் 'சுப்பிரமணியபுரம்' படத்தை பாக்யராஜ் சார் பையன், பாண்டியராஜன் சார் பையன் என இருவரையும் வைத்துதான் திட்டமிட்டேன். வெவ்வேறு காரணங்களால் திட்டமிட்டபடி அமையவில்லை.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து