திரைச்செய்திகள்

இசைஞானி இளையராஜாவின் இசை வாரிசாக தமிழ்த் திரையுலகில் தனக்கென்று தனி ராஜ்ஜியம் நடித்தி வருபவர் யுவன் சங்கர் ராஜா. தனது தந்தையின் இசை வாழ்க்கையை ‘ராஜா தி ஜர்னி’ என்ற தலைப்பில் திரைப்படமாக எடுக்க விரும்புவதாகவும், அதைத் தாமே இயக்க விரும்புவதாகவும் இளையராஜாவின் கதாபாத்திரத்தில் தனுஷை நடிக்க வைக்க எண்ணியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

யுவன் ஷங்கர் ராஜா ஏற்கெனவே இரண்டுமுறை திருமணமாகி மணவிலக்கு பெற்றவர். தற்போது, மூன்றாவதாக அவர் ஷாப்ரூன் நிஷா என்ற பெண்மணியை மணந்துகொண்டார். இவர் சென்னையில் நவீன துணி கடை ஒன்றை நடத்திவருகிறார் மணமொத்த தம்பதியாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்கிடையில் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி யுவனின் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகை, ‘உங்கள் கணவரை ஏன் மதமாற்றம் செய்தீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நிஷா, “ யுவன் சங்கர் ராஜா அவர்கள் இஸ்லாமை பின்பற்றி பின்பற்ற ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் கடந்த பிறகே அவர் எனக்கு அறிமுகமானார். அதன் பிறகே அவரை எனக்குத் தெரியும்.

குடும்பத்தினர் இருவரும் பேசி ஏற்பாடு செய்த திருமணம் எங்களுடையது” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் திருமணத்திற்கு முன்பே யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்ற தொடங்கிவிட்டார் என்பது தெரியவந்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

சிறந்த ஆங்கிலத் திரைப்படங்கள், சிறந்த வெளிநாட்டுமொழிப்படம், சிறந்த ஆவணப்படம், சிறந்த அனிமேஷன் படம் உள்ளிட்ட 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகிறது ஆஸ்கர் அகாடெமி.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சென்னை அசோக்நகரில் கணவர் தேவகுமாரன், இரு மகள்களுடன் வாழ்த்து வந்த தேவயானி தற்போது தனது கணவரின் சொந்த கிராமத்துக்குப் போய்விட்டார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து