திரைச்செய்திகள்

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது.

கொரானோ தொற்று பரவலை பொறுத்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என எல்லா தொழில்களையும் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

முதலில் மூடப்பட்ட தனித்திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.

அரசாங்கத்தின் எந்தவிதமான சலுகைகளும் இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த திரையரங்கு தொழில் மூலம் அரசுக்கு வருவாய் தரக்கூடியது. இந்த தொழில் மூலம் சுமார் 50,000ம் தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது.

யுவன் ஷங்கர் ராஜாவின் ரகசியம் உடைத்த மனைவி !

திரையரங்குகள் மூடப்பட்ட பின் 50,000ம் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது. பிற தொழில்களுக்கு விதி முறைகளுடன் அனுமதி வழங்கியது போன்று திரையரங்கு தொழிலை மீண்டும் தொடங்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என "தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்" வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோரிக்கைகளாவன :

திரையரங்கு உரிமையாளர்கள் கடைபிடிக்கவேண்டிய நடை முறைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டுகிறோம்.

அரசு வெளியிடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த குறைந்தது இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதால் அரசு உடனடியாக விதிமுறைகளை வெளியிட்டு திரையரங்கு உரிமையாளர்கள்; முன் தயாரிப்பு பணிகளை முடிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.

தற்போது கொரானா ஊரடங்கு காலத்தில் அனைத்து பொருட்கள், போக்குவரத்து செலவுகள் விலையேற்றம் பெற்றுள்ளன.

இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு திரையரங்குகளில் திரைப்படங்களை கண்டுகளிப்பது சமூக இடைவெளியின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கட்டுகள் விற்பனை செய்து பார்வையாளர்களை அனுமதிக்க முடியும்.

பாரதிராஜாவின் பனிவான கடிதம் !

இதன் காரணமாக டிக்கட் விலையை அதிகரிக்காமல் அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருக்ககூடிய திரையரங்கு தொழிலை பாதுகாக்கவும் பார்வையாளர்கள் வருகையை உறுதிப்படுத்தி அதிகரிக்க கீழ்க்கண்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றித்தர வேண்டுகிறோம்.

தமிழ்நாட்டில் தற்போது 1000 திரையரங்குகள் இயங்கி வருகின்றது. இவற்றில் தனி திரையரங்குகள் 700 இரண்டு மற்றும் அதற்கு அதிகமான திரைகளை கொண்ட மால், மல்டிபிளக்ஸ் 300 உள்ளது

தற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 8% முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம். இதனை ரத்து செய்வதன் மூலம் திரையரங்கு டிக்கட் கட்டணம் குறையும் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாக படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் திரையரங்கு, விநியோகஸ்தர்கள், அரசு என அனைத்து பிரிவினருக்கும் வருவாய் கூடுதலாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

தனி திரையரங்குகளுக்கான GST வரியை 5% சதவிகிதமாக குறைத்து நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம். .இவ்வாறு குறைத்து நிர்ணயம் செய்யும் வரிக்கு தற்பொழுது உணவகங்களுக்கு விதித்துள்ளது போன்று உள்ளீடு மறுப்பு (no input tax credit) முறையை அமுல்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு செய்வதன் மூலம் தற்பொழுது 100க்கு விற்பனை செய்யப்படும் (GST 12% + LBTtax8%) டிக்கெட் விலை 84 ரூபாய் 5% GSTயுடன் சேர்த்து குறையும் இதன் காரணமாக திரையரங்குகளில் டிக்கட் கட்டணம் குறையும், சாமான்ய மக்கள் திரையரங்குக்கு அதிகமாக வருவதற்கான சூழல் உருவாகும்.

மால், மல்டிபிளக்ஸ் திரைகளுக்கு உள்ளீடு அனுமதியுடன் தற்பொழுது நடைமுறையில் 18% , 12% GST வரியை ரத்து செய்து, ஒரே GST 12% நிர்ணயம் செய்து தரவேண்டுகிறோம். தேசிய ஊரடங்கு காலத்திற்கு முன்பாக தனி திரையரங்குகளுக்கு அதிக பட்சமாக 15% பார்வையாளர்கள் அளவில்தான் வருகை இருந்தது மேற்கூறிய கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றும் பட்சத்தில் 20% பார்வையாளர்கள் வரை திரையரங்குக்கு வரக்கூடிய சூழல் ஏற்படும் இல்லாத பட்சத்தில் 10% பார்வையாளர்களுக்கு குறைவாகவே வருவார்கள். இதன் காரணமாக ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிவரும் திரையரங்கு தொழில் நலிவடைவதற்கான சூழல் உருவாகும்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் ரோபோ சங்கர்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.