திரைச்செய்திகள்

பாலிவூட் திரை உலகில் பிரபலமான இசையமைப்பாளரும் பாடகருமான வாஜித் கான் தனது 42வயதில் காலமானார்

பாலிவூட் திரையுலகில் பிரபலமாக திகழ்ந்த இசையமைப்பாளர் மற்றும் பாடகர் வாஜித் கான் சீறுநிரக தொற்று காரணமாக சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது உடல் நிலை மோசமானதையடுத்து இன்று காலை அவர் காலமானார்.

1998ஆம் ஆண்டு வெளியான சல்மான்கானின் '"பியார் கியா தோ தர்ணா க்யா" திரைப்படத்தின் மூலம் சஜித்- வாஜித் இருவரும் அறிமுகமானார்கள், தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு பணியாற்றிய இருவரும் "வாண்டட்", "தபாங்" மற்றும் "ஏக் தா டைகர்" ஆகிய படங்களிளும் பணிபுரிந்து உள்ளனர்.

வாஜித் கான் ரவுடி ரத்தோர் படத்தில் நடிகர் அக்‌ஷய் குமாருக்கும் நடிகர் சல்மான் கானின் "மேரா ஹீ ஜல்வா", "ஃபெவிகால் சே" போன்ற படங்களிலும் பின்னணி பாடி உள்ளார்.

வாஜித் கான் அண்மையில் சல்மானின் "பியார் கரோனா" மற்றும் "பாய் பாய்" பாடல்களை பாடி உள்ளது குறிப்பிடதக்கது.

பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் வாஜித் கான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் ரோபோ சங்கர்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.