திரைச்செய்திகள்

"அவள் அப்படித்தான்", "கிராமத்து அத்தியாயம்" ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே எடுத்தார் சென்னை அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவரான ருத்ரையா.

இவற்றில், அன்று மிகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களாக ஆகியிருந்த கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா ஆகிய மூவரும் சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்த படம் "அவள் அப்படித்தான்". 1978-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் பாராட்டையும் அதேநேரம் எதிர்ப்பையும் சப்பாதித்த இந்தப் படம் தோல்வி அடைந்தது. ஆனால், "அவள் அப்படித்தான்" பேசிய பெண்ணியம், மிகவும் "அட்வான்ஸ் லெவல்" என்று இப்போதும் விமர்சகர்களாலும் பெண்ணியவாதிகளாலும் மரியாதையுடன் விமர்சிக்கப்படுகிறது.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியா ஏற்றிருந்த மஞ்சு கதாபாத்திரம் #மீடூ காலமாகிய இன்றைக்கும் பொருந்திப்போகும். அழியாத் தன்மை கொண்டதாக இருக்கிறது. அப்படிப்பட்ட மஞ்சுவை முன்னிலைப் படுத்தியே இயக்குநர் ருத்ரைய்யாவும் "அவள் அப்படித்தான்" என்று தலைப்பு வைத்தார். அப்படிப்பட்ட சிறந்த படத்தை, "பாணா காத்தாடி" படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் ரீமேக் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

பாரதிராஜாவின் பனிவான கடிதம் !

ஸ்ரீப்ரியா நடித்த மஞ்சு கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கயிருப்பதாகவும் இதற்காக அவரிடம் ஒப்புதல் பெற்றுவிட்டதாகவும் அவர் நம்மிடம் தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிம்புவும் கமல்ஹாசன் நடித்த வேடத்தில் துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டா நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

மறந்துவிடுங்கள்.. அன்பான மக்களே! 

இதுபற்றி பத்ரி வெங்கடேஷ் கூறும்போது "திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்து ருத்ரய்யா எடுத்த அவரது முதல் கனவுத் திரைப்படம் தான் "அவள் அப்படித்தான்". நானும் திரைப்படக் கல்லூரியிலிருந்து சினிமாவுக்கு வந்தவன்தான். அந்தப் படம் என் இதயத்துக்கு நெருக்கமானது. தற்போது படத்தின் உரிமை யாரிடம் இருக்கிறது என விசாரித்துக்கொண்டிருக்கிறோம். அமெரிக்காவில் வசிக்கும் அவரது மகளைத் தொடர்புகொள்ள முயன்று வருகிறோம். ரீமேக் உரிமை கைக்கு வந்தபிறகு தற்காலத்துக்கு ஏற்ப திரைக்கதை அமைக்கும் பணிகள் தொடங்கும்” எனத் தெரிவித்திருக்கிறார் பத்ரி வெங்கடேஷ்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.