திரைச்செய்திகள்

சமீபமாக வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

அரசியல், சினிமா, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்கள் மேலும் சராசரி வாழ்வில் சாதனை படைத்து தனித்துவமிக்கவராக மாறி நிற்பவர்களின் வாழ்க்கை கதைகளை ரசனைக்குரிய வெகுஜனத் திரைப்படங்களாக உருவாக்கித் தருவதில் இந்திய இயக்குநர்கள் வணிக ரசனைக் கொண்டவர்கள். அந்த வரிசையில் தற்போது சர்வதேச பளு தூக்கும் வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாகவுள்ளது.

சர்வதேச பளுதூக்கும் போட்டிகளில் உலக அளவில் சாதனைகள் புரிந்து, ஒருபடி அதிகமாகச் சென்று ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இவர், இந்திய பெண்களுக்கு மிகப்பெரும் முன்னுதரானமாக விளங்கும் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை பன்மொழிகளில் முழுமையான இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. இயக்குநர் சஞ்சனா ரெட்டி இயக்க, கொனா வெங்கட் படத்தின் எழுத்து பணிகளை மேற்கொள்கிறார். கர்ணம் மல்லேஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்க முதல் கட்டமாக தப்ஸி பண்ணு, ரகுல் ப்ரீத் சிங் ஆகிய இரண்டு கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறோம். இருவருமே நிபந்தனைகள் பல விதிப்பதால் எங்கள் கதாநாயகி தேடல் தொடர்கிறது. படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் தேர்வு நடந்து வருகிறது என்றும் விரைவில் படக்குழு குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார் இயக்குநர் சஞ்சனா.

நடிகர், நடிகைகளுக்கு யோகா ஆசிரியை ஆக இருந்த அனுஷ்காவை ஒரு நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் உருவாக்கிய படம் கடந்த 2009-ம் ஆண்டு

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.