திரைச்செய்திகள்

"ஒரு அடார் லவ் ஸ்டோரி" படத்துக்காக ஒரு கண்ணடிப்பில் உலகம் முழுவதும் ட்ரெண்டானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

அந்தப் படம் படுதோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. சமூக வலைதளங்களில் அவரைப் பின் தொடர்கிறவர்களின் எண்ணிக்கைக்கும் பஞ்சமில்லை.

I can't breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை...

இவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது புகைப்படங்களைப் பார்த்து ஏங்கும் ரசிகர்கள் கூட்டம் அவர் எப்போது தனது குறும்பான பதிவைப் போடுவார் என்று காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை இரண்டு வாரங்களுக்கு மூடிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது மீண்டும் அந்த கணக்கை திறந்து "ஐ யம் பேக்" என்று கூறி ஒரு காணொலியைப் பகிர்ந்துள்ளார்.

திரைக்கு வருகிறார் ஓர் ஒலிம்பிக் பெண்!

அதற்குக் கீழே, "சமூக வலைதளத்தில் அதிக நேரம் செலவிடுவதால் தனது நிம்மதி, ஆரோக்கியத்தை இழந்துவிட்டேன். ஆனாலும் உங்களிடம் திரும்பி வந்துவிட்டேன். கணக்கை திடிரென்று மூடியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். என்னைப் பற்றி உண்மையான அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி” தெரிவித்தார். அதற்கு ஒரு ரசிகர், "இதற்கெல்லாமா வருத்தம் தெரிவிப்பீர்கள்!” என்று ரசிகர் அவரைக் கிண்டல் செய்துள்ளார்.

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

ஆனால், "இண்டாகிராமை மூடிவிட்ட கடந்த இரண்டு வாரங்களில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், இருப்பினும் எனது திரைநடிப்பு மற்றும் மாடலிங் தொழிலுக்கு இந்த இடம் அவசியம் என்பதால் நான் திரும்பி வந்துள்ளேன்" என்று அவர் அதற்கு பதில் அளித்திருக்கிறார்.

ராஜா ரசிகர்களுக்குத் தந்திருக்கும் பிறந்த நாள் பரிசு!

மேலும் அவர், "என்னை ஆரோக்கியமான முறையில் நீங்கள் ட்ரோல் செய்யும்போது நன்றாக இருக்கிறேன், ஆனால் சில நேரங்களில் எதிர்மறையான ட்ரோலிங் என்னை காயப்படுத்துகிறது" என்றும் அவர் உண்மையை உடைத்துக் கூறியிருக்கிறார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

நடிகர், நடிகைகளுக்கு யோகா ஆசிரியை ஆக இருந்த அனுஷ்காவை ஒரு நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் உருவாக்கிய படம் கடந்த 2009-ம் ஆண்டு

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.