திரைச்செய்திகள்

பிடித்தால் மட்டுமே கதாபாத்திரங்களைத் தேர்ந்துகொண்டு. அவற்றை தனது அசாத்தியமான நடிப்புத் திறமையால் துடிப்புடன் முன்னிறுத்துவதில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.

‘பீட்சா’ படத்தில் தொடங்கி ‘நடுவுல கொஞ்ம் பக்கத்த காணோம்’ படத்தில் திறமையை நிறுவி ‘சூது கவ்வும்’ படத்தில் ரசிகர்களின் மனதைக் கவ்விய விஜய்சேதுபதியின் திரை பயணத்தில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்கும் பெரிய பங்குண்டு. இவரது நடிப்புத் திறமையைப் பார்த்தே ரஜினி காந்தும் கமல்ஹாசனும் இவருடன் நடிக்க விரும்புகிறார்கள். ரஜினியுடன் நடித்துவிட்ட விஜய்சேதுபதி கமலுக்கு வில்லனாக விரைவில் கைகோர்க்க இருக்கிறார். தற்போது விஜய்சேதுபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

விஜய்யின் 'மாஸ்டர்' ரீலீஸ் கூடாது - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள் !

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இதற்கிடையில் கோரோனா ஊரடங்கு முடிந்ததும் விஜய் சேதிபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இந்நிலையில் தான் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் கிடைக்கிறது. இதற்கான திரைக்கதை விவாதத்தில் இயக்குநருடன் தற்போது அவர் ஈடுபட்டு வருகிறாராம்.

நயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல!

கடந்த 2013-இல் கோகுல் இயக்கத்தில்வெளியான இதில், நடிகை ஸ்வாதி, நந்திதா ஸ்வேதா, அஸ்வின், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் முழுநீள காதல் நகைச்சுவைப் படமாக வெளியாகி வெற்றிபெற்றது நினைவிருக்கலாம்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

நடிகர், நடிகைகளுக்கு யோகா ஆசிரியை ஆக இருந்த அனுஷ்காவை ஒரு நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் உருவாக்கிய படம் கடந்த 2009-ம் ஆண்டு

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.