திரைச்செய்திகள்

தனது மகன் துருவ் விக்ரமை திரையில் அறிமுகப்படுத்துவதாக, தனது நண்பரான இயக்குனர் பாலாவை நாடினார் சியான் விக்ரம்.

இதற்கா தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் மறு ஆக்க உரிமையையும் வாங்கிக் கொடுத்தார் சியான்.

பாக்யராஜுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு ஃபைட் சீன்!

ஆனால் தமிழ் ரீமேக்கை இயக்கிய இயக்குனர் பாலா மிக மொக்கையாக உருவாக்கி அந்தப்படத்தை சகிக்க முடியாத அளவுக்கு மாற்றியிருந்தார் இருந்தார் என்று சியான் விக்ரம் பரபரப்பாகப் பேட்டி அளித்தார். இதனால் அந்தப் படம் நிறுத்தப்பட்டது.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

அர்ஜுன் ரெடி படத்தின் உதவி இயக்குனரையே வைத்து தமிழில் அந்தப்படத்தை ரீமேக் செய்தனர். ஆதித்யா வர்மா என்ற தலைப்பில் வெளியான அந்தப்படம் வெற்றி பெறாவிட்டாலும் துருவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தற்போது விக்ரம், தனது மகன் நடிக்கும் இரண்டாவது படம் நிச்சய வெற்றியாக அமைய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

 ஒரு சான்ஸ் குடு பெண்ணே..! : புதிய பாடல் டீசர்

இதற்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்டார். அப்பா மகனாக விக்ரமும் துருவும் சேர்ந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் கொண்ட கதையை கார்த்திக் சுப்புராஜ் கூற, அதுதான் விக்ரமுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. தற்போது கோப்ரா மற்றும் துருவ நட்சத்திரம் படங்களின் பணிகளைமுடித்து கொடுத்த பின்னர், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் மகனுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் சியான் விக்ரம். அப்பாவும் மகனும் கார்த்திக் சுப்பா ராஜ் இயக்கத்தில் கூட்டணி சேர்வது ரசிகர்களின் பெரிதும் எதிர்பார்க்க தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படம் விக்ரமின் 60 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் ரோபோ சங்கர்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.