திரைச்செய்திகள்

சென்னையில் கொரோனா உச்சம் தொட்டிருக்கும் நேரம். இந்த வேளையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்திருக்கும் காரியம் அவரை நோக்கிக் கவனம் திரும்பச் செய்திருக்கிறது.

தான் தொடங்கிய சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி பவுண்டேஷன் சார்பில் சாலையில் அநாதையாக திரியும் பசுக்கள், காளைகள், ஆடுகள், நாய்கள், பூனைகளுக்கு தெருத்தெருவாகச் சென்று உணவு வழங்கி வந்தார்.தற்போது தமிழகத்தில் கோரோனா தொற்றில் முதலிடத்தில் இருக்கும் சென்னையில் மக்கள் பயமின்றி நடமாடி கோரானாவை வீட்டுக்குக் கூட்டிச் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால், பாதுகாப்பாக வீட்டிலேயே இருப்பவர்களுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களைப் போலவே வரலட்சுமை சரத்குமாரும் சென்னையில் துணிந்து ஊர் சுற்றுக்கொண்டிருகிறார். தன்னுடன் தனது குழுவினரையும் அழைத்துச் செல்கிறார். தற்போது தனது சேவ் சக்தி அமைப்பு சார்பாக ரயில் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்திற்கே சென்று உணவு, தண்ணீர், முகக்கவசம் போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகிறார்.  வரலட்சுமி சரத்குமாரின் அம்மா சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்கள் அனைவருக்கும் துரிதமாக இந்த பொருட்களை வழங்க உதவி செய்தனர்.அந்தக் காட்சிகளை கானொளியில் காண்க

நடிகர், நடிகைகளுக்கு யோகா ஆசிரியை ஆக இருந்த அனுஷ்காவை ஒரு நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் உருவாக்கிய படம் கடந்த 2009-ம் ஆண்டு

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.