திரைச்செய்திகள்

மேக்னா ராஜ் என்றால் தமிழ் ரசிகர்கள் நன்றாகவே அறிவார்கள். 'காதல் சொல்ல வந்தேன்', 'உயர்திரு 420', 'நந்தா நந்திதா' உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர். அவர் பிரபல தெலுங்கு நடிகரும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் நெருங்கிய உறவினருமான (அக்காள் மகன்) சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து கடந்த 2018-ல் திருமணம் செய்துகொண்டார்.

மேக்னா தமிழை விட, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் 60-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். சிரஞ்சீவி சர்ஜா - மேக்னா ராஜ் திருமணத்துக்குப் பிறகு இருவருமே தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார்கள்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 6) சிரஞ்சீவி சர்ஜாவுக்கு திடீரென நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. உடனடியாக ஹைதராபாத்தின் ஜெயநகரில் உள்ள சாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் சர்ஜாவை காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு 39 வயது தான் ஆகிறது. இவர் நாயகனாக இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். இவரது தொண்டை சளி கரோனா மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு முதல் கட்ட பரிசோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சிரஞ்சீவி சார்ஜாவின் பரிசோதனையை புனேவுக்கும் அனுப்பிருப்பதாகத் தெரிகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

நடிகர், நடிகைகளுக்கு யோகா ஆசிரியை ஆக இருந்த அனுஷ்காவை ஒரு நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் உருவாக்கிய படம் கடந்த 2009-ம் ஆண்டு

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.