திரைச்செய்திகள்

காலம் எவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நடிகர்களை வைத்தும் காலம் நகரவே இல்லையே என நடிகைகளின் மாறா இளமையைக் கொண்டும் அறிந்துகொள்ளலாம்.

நடிகை அசின் அந்த வரிசையில் வருபவர். ‘ஃபேர் அண்ட் லவ்லி’ விளம்பரம் வழியாக இந்தியா முழுவதும் அறிமுகமான மலையாள முகம். தமிழில் ஒளிப்பதிவாளர் ஜீவாவின் ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் அறிமுகமாகி பின்னர், ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘கஜினி’, ‘சிவகாசி, ‘வரலாறு, ‘தசாவதாரம்’, ‘காவலன்’ உட்பட முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் கால் பதித்து ஆமீர்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் அங்கே வெற்றி பெறமுடியவில்லை.

காதல் மன்னனின் பிரம்மாண்ட சமூக சேவை!

அவர் வரிசையாகத் தோல்விப் படங்களில் நடித்தாலும் இந்தியில் சல்மான் கான், அக் ஷய்குமார், அபிஷேக் பச்சன் உட்பட 200 கோடி வசூல் கிளப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்.

சென்னையில் கொரோனா அபாயம் - நடிகை வரலட்சுமி செய்த காரியம் !

பின்னர் அக்‌ஷய் குமாருடன் ‘ஹவுஸ்புல் 2’ படத்தில் இணைந்து நடித்தபோது, மைக்ரோ மேக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பட அதிபருமான ராகுல் சர்மாவுடன் அசினுக்கு நட்பு ஏற்பட்டது. அதன்பின் இவரும் காதலித்து கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கணவரின் வேண்டுகோளை ஏற்று திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு முழுவதுமாக முழுக்கு போட்டுவிட்டு கணவருடன் தலைநகர் டெல்லியில் குடியேறிவிட்டார் அசின்.

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இந்த தம்பதிக்கு அரின் என்ற மூன்று வயது பெண் குழந்தை இருக்கிறாள். தனது சமூக வலைதள பக்கங்களில் எப்போதாவது தலைகாட்டும் அசின், அவ்வப்போது தனது மகளின் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது படக் கதைப் புத்தகங்களை படித்து முடித்தபின் அடுக்களையில் சமையல் செய்தும், வீட்டைத் தூய்மை செய்தும் விளையாடும் தனது மகள் பேபி அரினின் புகைப்படங்களை வாசகங்களுடன் பகிர, அவற்றை அசினின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது