திரைச்செய்திகள்

வங்காள நடிகையான ராதிகா ஆப்தே, பாலிவுட்டின் பாலா என்று அழைக்கப்படும் அனுராக் கஷ்யப்புக்கு மிகவும் பிடித்தமான நடிகை.

அவர் குறும்படத்தில் நடிக்க அழைத்தாலும் தயங்காமல் நடித்துக் கொடுப்பார். தனது துணிச்சலான நடிப்பிற்காகப் பெயர் போன ராதிகா, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனது நுணுக்கமான திறமையை நிரூபிக்கும் வகையில் மிக இயல்பாக நடித்துவிடுவார். தமிழ் ரசிகர்களுக்கு ‘தோனி’ படம் மூலம் அறிமுகமாகி பின்னர் கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடித்தார். ஆனால் ரஜினியுடன் கபாலி ஜோடி சேர்ந்த பிறகு தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போனார்.

செய்தி வாசிப்பாளரை எச்சரித்த அமைச்சர் !

தற்போது கோரானா ஊரடங்கின் காரணமாக ராதிகா ஆப்தே தனது கணவர், இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லருடன் லண்டன் வசித்துவருகிறார். முன்னதாக கடந்த 2019 டிசம்பரில் The Sleepwalkers என்ற குறும்படத்தை எழுதி இயக்கியிருந்தார் ராதிகா ஆப்தே. இந்தப் படம் தந்த அனுபவத்தில் வெகு விரைவில் முழு நீளத் திரைப்படத்தையும் எழுதி இயக்குவேன் என்றும் அப்போதே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்த அவர், தற்போது தனது முதல் ‘இயக்க’ முயற்சிக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்தை பெருமையுடன் தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

அடுக்களையில் கலக்கும் அசின் மகள்!

தனுஷுக்கு வந்த சோதனை !

“ எனது குறும்படம் பெருமைக்குரிய Palm Springs International ShortFest 2020 படவிழாவுக்கு அதிகார பூர்வமாக தேர்வாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறேன். மேலும்; competition for Best Midnight Short என்ற பிரிவின் கீழும் என படம் போட்டியிடுகிறது” என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது பதிவில் “நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமா வேலைகளிலிருந்து இருந்து விலகியிருந்து விடுமுறையை அனுபவித்து வருகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் இந்த ‘கபாலி’ கதாநாயகி.

உங்களுக்கானவை : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.