திரைச்செய்திகள்

தமிழ் கிராமிய வாழ்வில் ‘ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி; கழனிப் பானையில் விழுமாம் துள்ளி’ என்ற பழமொழி மிகப் பிரசித்தம். குஷ்பு விஷயத்தில் தற்போது அதுதான் நடந்துவிட்டது.

பத்திரிகையாளர்களைப் பார்த்தால் ‘ என்ன பாஸ் எப்படியிருக்கீங்க..? சொல்லுங்க சகோ... நீங்க இல்லாம நானெல்லாம் வந்திருக்க முடியுமா?” என்றெல்லாம் கொஞ்சி தாம் சம்மந்தப்பட்ட செய்திகளைக் கொண்டுவர வைத்துவிடுவார் குஷ்பு.

வேலை முடிந்தால் ஊடகத்தினரைத் திரும்பிக் கூட பார்க்கமாட்டார். ஆனால், இவரது கணவர் சுந்தர்.சி இவருக்கு அப்படியே நேர்மாறானவர். ஊடகத் துறையினரிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்பவர்.

இப்போது அவர் புசம் ஒரு ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. அதனைக்  கேட்டால் நீங்களே புரிந்துகொள்வீர்கள். என்னாச்சு இப்படி பேசுது இந்த குஷ்பு அக்கா.. என்று நினைப்பீர்கள். தொலைக்காட்சித் தொடர் தொழில் முடக்கம் நீங்க மறுபடியும் படப்பிடிப்பு நடத்துவதற்காக அனுமதி வாங்குவதற்காக தலைமை செயலகத்துக்கு நடையாக நடந்த போது முதல்வர், அமைச்சர் என அத்தனை பேரையும் பார்த்து விட்டு பத்திரிகையாளர்களிடம் வேண்டுகோள் வைத்து வந்தார்.

அப்போதெல்லால் இனித்த பிரஸ்காரர்களை இப்போது அரசு அனுமதி கிடைத்தவுடன் மரியாதை இல்லாமல் பேசுகிறார். படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் இல்லாமல், பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் பணி புரிவது குற்றம். அப்படிதான் அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஆனால், ‘பிரஸ்காரனுக்கு வேற செய்தியே இல்ல; அதனால் முகமுடி போடுங்க. இல்லன்னா பிரஸ்காரன் எடுத்துப் போட்டுருவான்’ என்று மரியாதை சிறிதும் இன்றி தனது படப்பிடிப்பு ஆட்களுக்கு உத்தரவிடுலது தெளிவாகப் பதிவாகியுள்ளது அந்த ஆடியோவில்.

திருமதி. குஷ்பு சுந்தர் அவர்கள் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசிய ஆடியோ பதிவால் அவரை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பொறுப்பில் இருந்து உடனே மாற்றி புதிதாக ஒருவரை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதாக தகவல். சங்க பொதுக்குழுவை உடனே கூட்டவேண்டும் என்று மூத்த தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.