திரைச்செய்திகள்

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞரை வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி கொன்றதற்கு கண்டனம் தெரிவித்து பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் குரல் கொடுக்கும் விதமாக பதிவுகளைப் போட்டனர்.

பிரியங்கா சோப்ரா சோனம் கபூர் உள்ளிட்ட பலர் எதிர்ப்புக்குரல் கொடுத்தாலும் பிரியங்கா சோப்ராவின் கண்டணப் பதிவு பத்து மில்லியன்களைக் கடந்து பகிரப்பட்டது. இதைக் கண்டு நம்ம ‘தலைவி’ உள்ளம் கொதித்துவிட்டாரா.. என்னவோ.. !? பிரியங்காவை செமத்தியாக வம்புக்கு இழுத்து சூடு கொடுத்திருக்கிறார் கங்கனா ரனாவத்.

நயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல!

தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’யில் நடித்துக்கொண்டிருக்கிறார் கங்கனா. அப்படத்தின் இந்திப் பதிப்புக்கு அமேசானில் 50 கோடி ரூபாய் விலைபோய் இருக்கிறது. இப்படிப்பட்ட வசூல் நட்சத்திரமாக இருக்கும் கங்கனா ரனாவத், ஜார்ஜ் பியாட் விவகாரத்தில் நேரடியாக இல்லாவிட்டாலும் நெட்டிசன்கள் எளிதில் மோப்பம் பிடித்துவிடும் அளவுக்கு தாளித்து சூடு கொடுத்திருக்கிறார். அவர் தனது முகநூலில் ‘பணத்துக்காக சிவப்பழகு க்ரீம் விளம்பரங்களில் நடிப்பவர்களுக்கு நிறவெறி பற்றி பேச தகுதி இல்லை. இந்திய நடிகர்-நடிகைகள் பலரும் சிவப்பழகு கிரீம்களைப் பயன்படுத்தி சிவப்பாகி விடலாம் என்ற பொய்யான விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள்.

ரஜினியின் நாயகி எடுத்த இயக்குநர் அவதாரம்!

ஆனால் இப்போது வெட்கமே இல்லாமல் கருப்பினத்தவருக்கு எதிராக மீண்டும் பேரளவில் தலைதூக்கியிருக்கும் இனவெறியை கண்டித்து குரல் கொடுத்திருக்கிறார்கள். சிவப்பழகு க்ரீம் நிறுவனங்களின் விளம்பரங்கள் நடிக்க கோடிக்கணக்கில் பேரம் பேசி ஒப்பந்தமாகி இருக்கிறார். இதைப்பற்றி யாரும் ஏன் என்று கூடக் கேட்பதில்லை. சிந்திப்பதில்லை. நான் எந்த முக அழகு. சிவப்பழகு க்ரீம் விளம்பரத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டது இல்லை; இனி எப்போதும் ஒப்புக்கொள்ளப் போவதுமில்லை” என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் தனது முகத்தில் கருப்பு சாயம் பூசிக்கொண்டு போட்டோவை பதிவிட்ட நடிகை தமன்னாவையும் ‘நீங்கள் சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடித்தவர் தானே’ என்று நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

நடிகர், நடிகைகளுக்கு யோகா ஆசிரியை ஆக இருந்த அனுஷ்காவை ஒரு நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் உருவாக்கிய படம் கடந்த 2009-ம் ஆண்டு

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.