திரைச்செய்திகள்

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்க கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், ஜெயராம் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் அறிமுக இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தேசிய திரைப்பட விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பெண்குயின்’ படத்தின் கதை வருமாறு:

மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ரிதம், தனது இரண்டாவது குழந்தையைப் பெறப் போகிறாள். அவள் ஒரு பயங்கர கனவால் அதிர்ச்சி அடைகிறாள். ஒரு குடை மனிதன் தன்னுடைய இழந்த மகனுக்கு தீங்கு விளைவிப்பதை அந்த கனவில் காண்கிறாள்.

பிக்பாஸ் சீசன் 4: கமலுக்கு சீரழிவா; விளம்பரமா ?

கனவின் பின்னணியில் உள்ள ரகசியங்களை அவிழ்ப்பதற்கும், தனது அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பதற்கும் அவள் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு நாயுடன் சேர்ந்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறாள். அந்தப் பயணத்தில் குடை மனிதனை அவள் கண்டுபிடித்தாளா இல்லையா என்பது கதை.

வெளியானது பென்குயின் டிரைலர்

பென்குயின் படத்தில் நடித்தது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், “பெண்குயின் படம் நான் பணியாற்றிய படங்களில் மிகவும் சுவாரசியமான சிறந்த படமாக இருக்கும். ‘ரிதம்’, ஒரு தாயாக, மென்மையானவளாக, அக்கறை உள்ளவளாக, ஆனால், துணிச்சலான பெண்மணி. அவள் குழப்பமானவள், ஆனால் உறுதியானவள். இந்தக் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவரும்.” என்று கூறியிருக்கிறார். இப்படம் வரும் வெள்ளிக் கிழமை அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியாகவிருக்கிறது.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

நடிகர், நடிகைகளுக்கு யோகா ஆசிரியை ஆக இருந்த அனுஷ்காவை ஒரு நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் உருவாக்கிய படம் கடந்த 2009-ம் ஆண்டு

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.