திரைச்செய்திகள்

பிரபல முன்னனி ஒளிப்பதிவாளரும் இயக்குனர் பாரதிராஜாவுடன் பணியாற்றிவருமான பி.கண்ணன் காலமானர்.

பி.கண்ணன் தமிழ் திரையுலகின் பிரபல முன்னனி ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர் ஆவார். 50 மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பி. கண்ணன் புகழ்பெற்ற இயக்குநர் பீம்சிங்கின் மகனும் எடிட்டர் லெனினின் சகோதரருமாவார். கண்ணன்,

இயக்குனர் பாராதிராஜாவின் 40 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி அவரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக புகழ் பெற்றவர்.

பி.கண்ணன் பாஃப்டா திரைப்பட கல்வி நிலையத்தில் 2015 முதல் ஒளிப்பதிவு பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இதய நோய்க் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்

கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் ரோபோ சங்கர்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.