திரைச்செய்திகள்

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று புகழப்படும் நடிகர் தளபதி விஜய்யின் 46-வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் வரும் 22-ஆம் தேதி கொண்டாட இருக்கிறார்கள்.

இதையொட்டி பொதுவான டிபி ஒன்றை உருவாக்கி அவரது ரசிகர்கள் அதனை ட்விட்டர் சமூக வலைதளத்தில் பிரபலப்படுத்தி வருகின்றனர்.

தனுஷ் வெளியிடும் ‘ஜெயில்’ பாடல்!

விஜய் ரசிகர் மன்றத்தில் பதிவு செய்துகொண்ட ரசிகர்கள் என்ற அடிப்படையில் மட்டும் 1 கோடியெ 35 லட்சம் பேர் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கேரளத்தில் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அங்கே மோகன்லால், மம்முட்டி படங்களுக்கு இணையாக விஜய்யின் படங்கள் வசூல் செய்கின்றன. வரும் ஜூன் 22-ஆம் தேதி தான் விஜய்யின் பிறந்தநாள் என்றாலும் முப்பது நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது மே 22-ஆம் தேதி முதலே விஜய் ரசிகர்கள் அவரது பிறந்த நாளைக் கொண்டாட தொடங்கி விட்டனர். அதன் ஒரு பகுதியாக இன்று விஜய் பிறந்தநாள் பொதுவான டிபி படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், காஜல் அகர்வால், வரலக்ஷ்மி சரத்குமார், கீர்த்தி சுரேஷ், மோகன்ராஜா,சாந்தனு, ஹேமா ருக்மணி, அஜய் ஞானமுத்து, விக்ராந்த் , கதிர், வைபவ், இந்துஜா உட்பட 20 பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட புதிய ஸ்டில்ஸ்

இதன்பின்னர் #THALAPATHYBdayFestCDP , #Master ஆகிய ஹேஷ் டேக்குகள் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறன. அவை இரண்டிலும் சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்களை பதிவிட்டு, விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டுள்ளனர். மேலும், விஜய் பிறந்தநாள் அன்று மாஸ்டர் படத்தின் அப்டேட், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’ ஆகிவற்றின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேநேரம் மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியீட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்கிறாகள்.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.