திரைச்செய்திகள்

15 ஆண்டுகளுக்கு முன் சன் டிவியில் புகழ்பெற்ற ‘ஸ்ஃபூப்’ நிகழ்ச்சியான லொள்ளு சபாவிலிருந்து ஆரம்பித்து சந்தானத்தின் சாம்ராஜ்ஜியம். பின்னர், சிம்புவால் சினிமாவில் காமெடி நடிகராக நுழைந்து பின் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்துவிட்டார்.

இளையராஜாவின் இசைக்காக பல படங்கள் ஓடியதுபோல சந்தானத்தின் ‘டைமிங்கில் கலாய்’ நகைச்சுவைக்காவும் பல கதாநாயக்ர்களின் படங்கள் ஓடின. இதனால் ஒரு நாள் கால்ஷீட்டுக்கு 5 லட்சம் ரூபாய் ஊதியம் வாங்கினார். பின் காமெடி வேடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கதாநாயகன் அவதாரம் எடுத்தார்.

என்ன காரணமோ தெரியவில்லை. அவர் நாயகனாக நடித்த படங்களில் இதுவரை கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஏ1 ஆகிய படங்கள் இரண்டு படங்கள் மட்டுமே ஓடின. மற்ற 7 படங்கள் போட்ட முதலையே எடுக்க முடியவில்லை. இருப்பினும் சந்தானத்திற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சந்தானம் தற்போது டிக்கிலோனா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்குகிறார். பாலிவுட் கதாநாயகியான ஷிரின் கஞ்சவாலா சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

‘டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பில் தினசரி ஒருமணிநேரம் ஷிரினிடம் இருந்து ஹிந்தி மொழியை மிகவும் ஆர்வமாக கற்று வருகிறார். இதற்காக ஷிரின் தினசரி ஒர்க்புக் பயிற்சி கொடுப்பதுடன்.. ஹிந்தி காமிக்ஸ் புத்தகங்களை பரிசாகக் கொடுத்து, அவற்றிலிருந்து சின்னச் சின்ன காமிக்ஸ் கதைகளைப் படித்து கதையைப் புரிந்துகொண்டு தனக்குச் சொன்னால்தான் ஷாட்டில் நடிக்க வருவேன்’ அன்புக் கட்டளை போட அதை சிரமேற்கொண்டு செய்துவருவதாக சந்தானத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.