திரைச்செய்திகள்

காதல் தோல்வி, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தோல்வி, இவற்றை சமாளிக்க இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் என இருந்து வந்த சிம்பு. ஒரு இடைவெளிக்குப் பிறகு மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அந்தப் படத்தின் படப்பிடிப்பில் சரியான நேரத்துக்குச் சென்று நடித்துவந்தார்.

படப்பிடிப்பு பணிகள் மும்மரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் கொரோனா பாதிப்பால் 30% படப்பிடிப்புடன் படம் நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பே கன்னடத்தில் வெற்றிபெற்ற ‘மஃப்டி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உறுதியளித்திருந்தார். மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் சிவராஜ் குமார், கதைக்காக நார்தன் என்ற அறிமுக இயக்குநரின் இந்தப் படத்தில் நடித்திருந்தார்.

ஆஸ்கர் விருதுக்கு மூடுவிழா !

கன்னடத்தில் இயக்கிய நார்தன் தான் தமிழிலும் இயக்கவிருந்தார். மேலும் படத்தின் சில காட்சிகளும் சோதனை அடிப்படையில் படமாக்கப்பட்டன. இப்படத்தை கிரீன் ஸ்டுடியோ ஞானவேல்ராஜா தயாரித்து வந்தார். இதையடுத்து, ஞானவேல் ராஜாவுக்கும், கதையில் சில மாற்றங்கம் வேண்டும் எனக் கேட்ட சிம்புவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது இந்த ஊரடங்கு திரையுலகினர் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஞானவேல் ராஜாவும் சிம்புவும் தொலைபேசியில் மனம் விட்டுப் பேசியதாகவும், ஒரிஜினல் படத்தில் இருப்பதில் நடிக்க நான் ஒப்புக்கொள்கிறேன் என்று சிம்பு தனது பிடிவாத்த்தை விட்டுக்கொடுத்துவிட்டதாகவும், இதனால் ஊரடங்கு முடிந்ததும் ‘மப்ஃடி’ படத்தின் ரீமேக்கைத் மறுபடியும் எடுக்க முடிவு செய்ததாகவும் ஞானவேல் தரப்பில் கூறப்படுகிறது. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.மஃப்டி மற்றும் மாநாடு இரண்டு படத்திலும் மாறி மாறி நடிக்க இருப்பதை சிம்பு தனது சமூக வலைதளம் மூலம் அறிவிப்பார் என்கிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

கோலிவுட் டோலிவுட் மல்லூவுட் சாண்டல்வுட் என தென்னிந்திய திரையுலகில் முக்கிய நாயகியாக வலம்வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.