திரைச்செய்திகள்

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று ஹிந்தி திரைப்படமான ‘தோனி’யில் ஹீரோவாக நடித்த வளரும் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த கடந்த 14-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

இவரது நடிப்பில் கடந்த மே மாதம் 8-ம் தேதி வெளியாக இருந்த ‘Dil Bechara’ என்ற படம் கொரோனா ஊரடங்கால் நின்று போனது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தின் இசை வெளியீட்டிலும் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார். சுஷாந்த் இறந்தபோது ‘என்னமாதிரியான் ஒரு வழியை இங்கிருந்து செல்வதற்கு தேர்ந்தெடுத்தாய் சுஷாந்த்... இதைவிட சிறந்த ஒரு உலகத்தில் அமைதி கொள்வாய்’ என்று ஏ.ஆர்.ரஹ்மான் செய்திருந்த ட்வீட், சுசாந்த் ரசிகர்களைக் கண் கலங்கச் செய்தது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் கடைசியாக நடித்திருந்த ‘Dil Bechara’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் முயன்றுவரும் செய்தி பாலிவுட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக களமிறங்கிய அவரின் ரசிகர்கள் #DilBecharaOnBigScreen என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டர் தளத்தில் அதைப் பிரபலப்படுத்தினார்கள். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘சுஷாந்த் சிங்கின் கடைசி படத்தை தியேட்டர்களில் பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள்’ என்று குறிப்பிட்டு #DilBecharaOnBigScreen என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு சுஷாந்த் ரசிகர்களின் கோரிக்கையை பரப்பியுள்ளார்.

இதற்கிடையில் நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரம் தொடர்பாக சல்மான் கான், கரன் ஜோஹர் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் என்பவர் வழக்குத் தொடுத்துள்ளார். ‘படங்களில் இருந்து சுஷாந்தை நீக்கி அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு தள்ளியிருப்பதாக நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.