திரைச்செய்திகள்

கௌதம் மேனனின் கதாநாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மலையாள மங்கையான மஞ்சிமா மோகன்.

அவரது திறமை வாய்ந்த நடிப்பு அவர் பங்கேற்கும் அனைத்து படங்களிலும் கவனிக்கப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது. மிககுறுகிய காலத்தில் அதிக ரசிகர்களைப் பெற்ற மஞ்சிமா, நடிப்புக்கு வெளியே திறமையான தனது மற்றொரு பக்கத்தைக் காட்டியிருக்கிறார்.நல்ல திறமைகளை ஊக்கம் தந்து முன்னிறுத்தும் ஒன் இன் எ மில்லியன் one in a million என்ற இணையதளத்தை தொடங்கியிருப்பதை நம்மிடம் அறிவித்துள்ளார்.

அய்யப்பன் நாயர் ஆக விரும்புகிறேன்: பார்த்திபன்

இது குறித்து நடிகை மஞ்சிமா மோகன் கூறும்போது: நான் ‘ஒன் இன் எ மில்லியன்’ என்ற தளத்தை, மிகச்சிறந்த திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு தான் ஆரம்பித்தேன். இந்த தளத்தை ஆரம்பிக்கும் முன்னர் நான் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தேன். இதில் நடத்தப்படும் போட்டிகள் வழக்கமானதாக இருக்ககூடாது என்பது தான் அது. அதற்கு பதிலாக இந்த தளம் திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் குழுமமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இக்குழுமத்தில் திறமையாளர்கள் கைவினை செயல், நடனம், இசை, பாடல் என தங்கள் திறமைகளை, பதிவேற்றி பாராட்டுக்களை பெறலாம்.

ரஜினியின் ஒரு நாள் ரகசியம் !

இந்த தளம் ஓர் இரவில் நடந்த மாற்றம் கிடையாது. எனது கல்லூரி நாட்கள் முதலாகவே இந்த தளம் பற்றிய எண்ணம் என் மனதில் இருந்தது. உலகமே எதிர்மறைதன்மையில் இயங்கும் இந்த சூழலில் அனைவரிடத்திலும் நேர்மறைத்தன்மையை வளர்க்க இந்த ஏற்பாடு மிகச்சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன். இச்சூழல் முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும் இதனை தொடர்ந்து நடத்துவேன் எனது தளத்தின் மிக முக்கிய குறிக்கோள் வயது வரம்பின்றி அனைத்து திறமைகளையும், அனைவரையும் பங்கு கொள்ள வைப்பது.” என்றார்.

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து