திரைச்செய்திகள்

இயக்குநர், பாடலாசிரியர், திரைக்கதையில் உதவி செய்பவர் என பல வித்தைகள் தெரிந்தவர் விக்னேஷ்சிவன்.

இவருக்கும் நயன் தாராவுக்கும் இடையே ‘நானும் ரௌடி தான்’ படப்பிடிப்பின்போது காதல் மலர்ந்தது. தங்கள் காதலை நீண்டகாலம் ஒளித்து வைத்திருந்த இவர்கள் ஒரு கட்டத்தில் கிசுகிசுக்களுக்கு முடிவு கட்டும்விதமாக தாங்கள் இணைந்திருக்கும் படங்களை வெளியிட்டு, திருமணம் செய்து கொள்ளாமல் ‘லிவ் இன் டுகெதர்’ முறைப்படி வாழ்ந்து வருவதை உறுதிப்படுத்தினார்கள். ஆனால் இவர்களுடைய திருமணம் எப்பொழுது என்று ரசிகர்களும் கடந்த 3 வருடங்களாகக் கேட்டு வருகின்றனர். வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் குடும்பத்திருமணமாக கொச்சினில் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

நயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல!

தற்போது சென்னையில் எழும்பூர் அரசு அருங்காட்சியகம் அருகே உயர்தட்டு வர்க்கத்தினர் வசிக்கும் ‘கேட்டட் கம்யூனிட்டி’ அடுக்குமாடி குறியிருப்பில் வசித்து வருகிறார்கள். இதே ‘கேட்டட் கம்யூனிட்டி’ பல சினிமா பிரபலங்கள் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, வீட்டிலிருந்தே காதல் மழையை பொழிந்து வரும் இந்த ஜோடியின் வீட்டுக்கு டாக்டர் குழு ஒன்று வந்து செல்ல, நயன்தாரவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கொரானா உறுதியாகிவிட்டதாக ‘கேட்டட் கம்யூனிட்டி’யில் செய்தி பரவியது. இதனால், அதன் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பத்துபேர் அடங்கிய குழு நயன் தாராவின் வீட்டின் கதவைத் தட்டி விவரத்தைக் கேட்டுள்ளனர். ‘மருத்துவக் குழு வந்து சென்றது மாஸ்டர் ஹெல்த் செக் -அப்புக்காக’ என்று விக்னேஷ்சிவன் சொன்னதுடன் கோவிட் பரிசோதனையும் செய்துகொண்டோம் எனக் கூறியுள்ளார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவானது!

‘நீங்கள் எதற்காக கோவிட் டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்?’ என அக்குடியிருப்பின் என செயலாளர் கேட்க, “ ஊரடங்கு தொடங்கும் முன் ‘மூக்குத்தி அம்மன் படப்பிடிப்புக்காக கேரளத்தை ஒட்டியுள்ள நாகர்கோவிலுக்கும் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தும் சென்று வந்தார். அதனால்தான்” என்று கூறியுள்ளார். டெஸ்ட் முடிவு வர இரண்டு நாள் ஆகும் என்ற நிலையில் அந்தக் குடியிறுப்பிலிருந்து பலரும் பீதியுடன் வெளியேறியிருக்கிறார்கள். இந்நிலையில்தான் நெகட்டீவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. இதை நயன்தாராவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்தபடி இருந்தன.

இது பெண்குயின் அல்ல; மண்டையைக் குடையும் ‘பெயின்’குயின் !

இதனால் கோபமடைந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் குழைந்தைகள்போல் நடனமாடும் செயலிக் காணொளி ஒன்றை வெளியிட்டு, “நாங்கள் நலமாக இருக்கிறோம்” என்று காட்டமாகக் கூறியிருந்தார். அப்படியும் செய்திகள் அடங்காததால் தற்போது, நயன்தாராவின் நெற்றியில் விக்னேஷ் சிவன் முத்தமிடுவதுபோன்ற புகைப்படம் ஒன்றை முதல்முறையாகப் பதிவிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார். இணையத்தில் பிரபலமாகி வரும் அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர். ‘அடுத்து கல்யாணம், குழந்தைன்னு அடிச்சு உடு தல’ என எதிர்வினை செய்துள்ளார். பலரும் அந்தப் புகைப்படத்தை ‘க்யூட்’ எனவும், ‘சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது’ எனவும் விதவிதமாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இதையும் ஒருமுறை பார்த்துச்செல்லுங்கள் :

உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும் : ஆம்பல் சிறுகதைப்போட்டி !

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து