திரைச்செய்திகள்

கான் நடிகர்களில் காசுக்காக தவறான விளம்பரங்களில் நடிக்காத நடிகர் எனப் பெயர்பெற்றவர் ஆமீர் கான். ஒருபக்கம் வணிகப் படங்களில் நடித்தாலும் ‘லகான்’ தொடங்கி ‘பி.கே’ வரை சமூகத்தில் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கான படங்களையும் தயாரித்து நடித்து வருபவர்.

இவரது தாரே ஜமீன் பர், த்ரி இடியட்ஸ், தங்கல் போன்றவை கல்விமுறை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றின் மீது கடும் விசாரணைகளை முன்வைத்த வணிகப் படங்கள். குறிப்பாக தங்கல் திரைப்படம் சீனாவில் இந்தியப் பணத்துக்கு 600 கோடி ரூபாய் வசூல் செய்தது. ‘ தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ படத்துக்கு பிறகு தற்போது ஆமீர் கான் ‘லால் சிங் சத்தா’ என்ற படத்தில் நடித்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு தொடங்கியதும் சாமானிய மக்கள் படும் அவஸ்தையை பார்த்து ஒரு கிலோ கோதுமை மாவுக்குள் தலா 10 ரூபாய் வைத்து சுமார் ஐந்தாயிரம் ஏழைகளுக்கு வழங்கியிருக்கிறார் என செய்திகள் வெளிவந்தன. தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவழித்து வரும் ஆமீர் கானுக்கு, இரா கான் என்ற மகளும், அசாத் ராவ் கான் என்ற மகளும் உள்ளனர்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஊக்கமுடன் பதிவுகளை இட்டுவரும் அமீர்கானின் மகள் இரா, தனது தந்தையுடனான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் நேற்று, தந்தையர் தினத்தை முன்னிட்டு நேற்று அவர் வெளியிட்டிருந்த புகைப்படம் பிரபலமாகி வருகிறது. இதுவரை தனது நரைத்த தலைமுடியை ஆமீர்கான் வெளிப்படுத்தியது இல்லை. முதல்முறையாக மகளுடன் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் புகைப்படம் எடுத்துகொண்டிருக்கிறார். மில்லியன்களில் லைக்குகளை அள்ளி வருகிறது அந்தப் புகைப்படம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து