திரைச்செய்திகள்

கடந்த இரு வாரங்களுக்கு முன் ‘கபாபி’ பட நாயகியான ராதிகா ஆப்தே இயக்கிய 'தி ஸ்லீப்வாக்கர்ஸ்' என்ற குறும்படத்தைப் பற்றிய செய்தியை 4தமிழ்மீடியா வெளியிட்டிருந்த நினைவிருக்கலாம்.

அந்தப் படம் குறும்படங்களுக்காகவே புகழ்பெற்ற பாம்ஸ் ஸ்ப்ரிங் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவுக்கு அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த செய்தியையும் குறிப்பிட்டிருந்தோம். தற்போது ராதிகா ஆப்தே இயக்கி அந்தப் படத்துக்கு 'சிறந்த நள்ளிரவுக் குறும்படம்' என்ற விருது கிடைத்துள்ளது.

ரஜினியின் நாயகி எடுத்த இயக்குநர் அவதாரம்!

'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி 'கபாலி' வழியே ரசிகர்களைக் கவர்ந்த ராதிகா ஆப்தே இயக்கியிருக்கும் 'தி ஸ்லீப்வாக்கர்ஸ்' குறும்படத்தில் சஹானா கோஸ்வாமி, குல்ஷன் டேவையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் தூக்கத்தில் நடக்கும் உளச்சிக்கல் பிரச்சினையை மையமாகக் கொண்டது. சினிமா இயக்கம் தனக்குப் பிடித்தது என்றும், தனக்கு மேலும் இயக்கும் வாய்ப்புகள் வரும் என்று நம்புவதாகவும் ராதிகா ஆப்தே விருது பெற்ற தருணத்தில் கூறியுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து