திரைச்செய்திகள்

படத் தயாரிப்பாளர்கள் பலர் இயக்குநர்களாக உருமாறுவது உண்டு. அதற்கு தகுந்த எடுத்துக்காட்டு சி.வி.குமார்.

ஆனால், பல படங்களைத் தாயாரித்துவிட்டு நடிகராக அடியெடுத்து வைக்கும் தயாரிப்பாளர்களில் பல வெற்றியடைவதில்லை. அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டுகள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, மற்றும் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார். ஆனாலும், ரசிகர்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் ‘சிக்ஸ்பேக்’ செய்து, நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு, அருண் விஜய் நாயகனாக நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமாக இருக்கிறார் தயாரிப்பாளர் எக்ஸெட்ரா என்ட்டர்டெயின்மெண்ட் மதியழகன்.

வெற்றிகரமான 100-வது நாள்!

அருண் விஜய் ரித்விகா சிங் பிரதான வேடங்களில் நடிக்கும் பாக்ஸர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பது யார் என்பதை படம் அறிவிக்கப்பட்டபோதே அறியும் ஆவல் ரசிகர்கள் மனதிலும் எழுந்தது. சரியான நபரைத் தேர்ந்தெடுக்கும் நீண்ட தேடலில் தோல்வியே மிஞ்சியதாம். இதனால் தயாரிப்பாளர் மதியழகனே இந்த வேடத்துக்கு தன்னை உருமாற்றிக்கொண்டிருக்கிறார். எதற்காக இவருக்கு இந்த வேண்டாத வேலை என்பதை அவர் சொன்னால்தானே நமக்கும் தெரியும். கேட்டே விட்டோம்.

கௌதம் மேனன் எடுத்த புதிய முடிவு!

“பாக்ஸர் படத்தைத் தொடங்கியபோது, இது போன்ற திட்டம் எதுவுமில்லை. பலம் மிக்க எதிர்மறை வேடத்திற்கு உயிரூட்டக்கூடிய சரியான நபரைத் தேர்வு செய்யும் பணியில் இயக்குநர் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து நானும் ஈடுபட்டேன். இறுதியில் இயக்குநர் விவேக் அந்த வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லியபோது, அதை ஏற்க நான் தயங்கினேன். பரிட்சார்த்த முறையில் என்னை வைத்து சில காட்சிகளைப் படமாக்கியதைப் பார்த்த பின் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆயினும் அருண் விஜய், ரித்விகா சிங் மற்றும் பல சீனியர் நட்சத்திரங்களுடன் இணைந்து நடிப்பதில் எனக்குத் தயக்கம் இருந்தது. மேலும், பலம் பொருந்திய நபருடன் குத்துச் சண்டை போடுவது போலல்ல இந்த வேடம். தன் இலக்கை அடையத் துடிக்கும் நாயகனுக்கு தடை போட்டு, குறுக்கே நிற்கும் வேடம் என்பதால் படக்குழுவினரின் விருப்பத்துக்கு மறுப்பு சொல்லாமல் நடிக்கிறேன்” என்றார்.

மேலும் கூறிய அவர் “மூன்று வெவ்வேறு தோற்றங்களில் திரையில் தோன்றும் காரணத்தால் உடல் எடையைக் கூட்ட சற்றே கால அவகாசம் தேவைப்படும் என்பதை பாக்ஸர் படத்தின் படப்பிடிப்பு துவங்கும்போதே அருண் விஜய் முன்கூட்டியே என்னிடம் தெரிவித்தார். எனவே கோவிட் 19 பெருந்தொற்று பிரச்னைகள் முடிவுக்கு வந்ததும், முழு வீச்சில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம், ஹன்சிகா மோத்வானி நடித்து முடித்திருக்கும் மகா, ராஜா மந்திரி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, செமை போதே ஆகாதே, மற்றும் ரோகினி இயக்கியிருக்கும் அப்பா ஆகிய படங்களையும் மதியழகன் தயாரித்துள்ளார் என்பதும் இவர் கடந்த 2000 ஆண்டுமுதல் சினிமாவின் விநியோகத்தில் ஈடுபட்டு பின் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து