திரைச்செய்திகள்

பாகுபலி படத்திற்கு பின் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிவரும் படம் ‘ஆர் ஆர் ஆர். அந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா ஆகியோர் கதாநாயகர்களாகவும் கதாநாயகியாக பிரபல பாலிவுட் இளம் நட்சத்திரம் ஆலியா பட்டும் நடித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் ஆந்திராவில் போராடிய சாமானியர்களின் கதை என்று கூறப்பட்டுள்ள இந்த படத்தில் இருந்து, கதாநாயகி ஆலியாவை நீக்க வேண்டுமென்று ராஜமௌலியின் ரசிகர்களும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சுஷாந்த் சிங்கின் ரசிகர்களும்போர்ககொடி தூக்கி இருக்கிறார்கள்.

வெற்றிகரமான 100-வது நாள்!

சுஷாந்தின் தற்கொலைக்கு சல்மான் கான், ஆலியா பட், கரண் ஜோகர் ஆகிய மூவரின் நெப்போட்டிசம் அரசியல் ஒரு காரணமாக இருக்கலாம் என்று பாலிவுட்டில் கடும் விவாதம் நடந்து வருகிறது. இவர்கள் கொடுத்த மன உளைச்சல் காரணமாகவே சுஷாந்த் சிங்கிற்கு வாய்ப்புகள் பறிபோயின என பாலிவுட்டில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சுஷாந்த் சிங்கை 'காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் அலட்சியமாகப் பேசும் ஆலியா பட்டின் பழைய காணொளி ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது. இந்த விவகாரத்தில் ஆலியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 13 லட்சம் பெயர் unfollow செய்திருக்கிறார்கள். சுஷாந்த் ரசிகர்களும் ராஜமௌலியின் ரசிகர்களும் ‘ஆர் ஆர் ஆர் படத்திலிரந்து ஆலியாவை நீக்காவிட்டால் நாங்கள் அந்தப் படத்தை புறக்கணிப்போம்’ என்று சமூக வலைதளங்களில் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

அருண் விஜய் படத்தில் வில்லனாகும் தயாரிப்பாளர்!

இன்னும் சில நெட்டிசன்கள் ஆலியாவை நீக்காவிட்டால் ராஜமௌலியை பொது இடத்தில் தாக்குவோம் என்று கொலை மிரட்டலும் விடுத்து வருகிறார்கள் ஆலியாவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதால் ராஜமௌலி அவரைத் தனது படத்திலிருந்து நீக்குவார் என்று பரபரப்பும் உருவாகி வருகிறது. ஆனால், ஆர்.ஆர்.ஆர் படத்தின் 35% காட்சிகள் படமாகிவிட்டதாக தயாரிப்பு நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் இன்று காலமானார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து