திரைச்செய்திகள்

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 100 நாட்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இதனால், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கும் மின்வாரிய ஊழியர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ரீடிங் எடுக்க வரவில்லை. மேலும் முந்தைய இரு மாதத்துக்கான மாதக் கட்டணத்தை செலுத்தினால் போதும் என்று மாநில மின்சார வாரியங்கள் அறிவித்தன. தற்போது மூன்று மாதங்களுக்குப் பின்னர் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் மின் மீட்டர்களில் மீண்டும் ரீடிங் எடுக்கும் பணி தொடங்கியது. ஆனால், தற்போது மின்கட்டணங்களை பல மடங்கு கூட்டி வசூலிக்கும் பகல் கொள்ளையை தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் செய்து வருவதாக மக்கள் குற்றச்சாட்டினர். இது தொடர்பாக நாடு முழுவதும் பல பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டன. சென்னையிலும் ‘முந்தைய பருவ மின் கட்டணத்தில் யூனிடுகளைக் கழிக்காமல் தொகையை மின் வாரியங்கள் கழித்து மக்களை ஏமாற்றுகின்றன’ என்று பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்கில் ஜூலை 2-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

அஜித்தின் யோசனைக்கு அபார வெற்றி!

இதற்கிடையில் மின் கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நடுத்தர மக்கள், வீட்டை விட்டு மின் வாரிய அலுவகங்கலுக்குப்போய் முறையிட முடியாத நிலையில் உள்ளனர். திரையுலகப் பிரபலங்களுக்கும் இந்த மின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். முதலில் நடிகர் பிரசன்னா தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். தற்போது, நடிகை ராதாவின் மகளும் ‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த கார்த்திகா மின்கட்டணம் குறித்த தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். கோ படத்திற்கு பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்தார். தற்போது இந்தியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.

ராதிகா ஆப்தேவின் இயக்கத்துக்கு முதல் விருது !

அதனால் தற்போது மும்பையில் வசித்துவரும் கார்த்திகா கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் தனியாக இருக்கிறார். அவர் குடியிருந்துவரும் மும்பை அந்தேரி அடுக்குமாடிக் குடியிருப்புக்கான மூன்று மாத மின் கட்டணம் 1 லட்சம் ரூபாய் என மும்பை மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியதைத் தொடர்ந்து, கடும் கோபம் கொண்ட அவர் “ இது என்ன விதமான ஊழல்? மும்பையின் அரசு நிர்வாகம் ஏன் இவ்வளவு மோசமாக சென்றுவிட்டது. எனது ஜூன் மாத மின் கட்டணம் மட்டும் ஒரு லட்சம்.. (அவர்களால் மீட்டர் ரீடிங் செய்ய முடியாத நிலையில், அவர்களின் தோராய கணக்கு படி) மும்பையில் இருக்கும் மற்ற பலரிடம் இருந்தும் இதுபோன்ற புகார்களை நான் கேட்கிறேன்” என தனது பதிவில் துணிச்சலுடன் குறிப்பிட்டுள்ளார். பாரதிராஜாவின் இயக்கத்தில் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ படத்தில் ஆடுமேய்க்கும் பெண்ணாக நடித்து அசத்திய கார்த்திகா.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் இன்று காலமானார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து