திரைச்செய்திகள்

கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து பின்னர் அதில் நடந்த அரசியல் காரணமாக பைக் மெக்கானிக் ஆகிவிடும் கதாபாத்திரத்தில் ‘கனா’ படத்தில் நடித்து அதைத் தயாரிக்கவும் செய்திருந்தார் சிவகார்த்திகேயன்.

அவரது கல்லூரி நண்பர், பாடலாசிரியர், பாடகர், நடிகர் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான அந்தப் படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக கனவு காணும் கிராமத்து விவசாயின் மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். சத்யராஜுன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படம். தமிழில் வெற்றிபெற்றதுடன் தெலுங்கில் ஏற்கெனவே ‘கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற பெயரில் ரீமேக் ஆகி விட்டது.

ராதாவின் மகள் கார்த்திகாவின் கண்டனம்!

தற்போது இந்தப் படத்தை இந்தியில் அனுராக் காஷ்யப் ரீமேக் செய்ய இருக்கும் தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான ‘சோக்டு (Choked)’ வெப் சீரிஸ் தொடரில் கதாநாயகியாக நடித்திருந்த சயாமி கெர் என்ற பாலிவுட் நடிகையை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அவர் தனது பதிவில் ‘சோக்டு’ வெப்சீரீஸ் பார்த்தேன். வாழ்த்துகள் சயாமி கெர். உங்கள் நடிப்பு ஆச்சரியப்படுத்தியது. உங்களை விரைவில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமொன்றில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அஜித்தின் யோசனைக்கு அபார வெற்றி!

அதேபோல சிவகார்த்திகேயனின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக சயாமி கெர், “நன்றி சிவகார்த்திகேயன் சார். உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. ஆம், கிரிக்கெட் படத்துக்கு ஆவலாகக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் சிவகார்த்திகேயன் ‘கனா’ படத்தின் இந்தி ரீமேக்கில் ஐஸ்வர்யா ராகேஷ் நடித்த கதாபாத்திரத்தில் சயாமி கெர் நடிக்க இருக்கும் ரகசியத்தை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே சிவகார்த்திகேயன் ரகசியம் உடைத்துவிட்டதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து