திரைச்செய்திகள்

‘ஓவர் தி டாப்’ என்று கூறப்படும் இணையத் திரை நிறுவனங்களில் ஒன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம்.

கோரோனா ஊரடங்கிற்கு முன்னர் பாலிவுட்டில் தயாராகியிருந்த ஏழு பெரிய படங்களின் உரிமையைக் கைப்பற்றி வளைத்துப் போட்டிருக்கும் இந்நிறுவனம் அவற்றின் டிஜிட்டல் வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது. அந்தப் படங்கள் பற்றிய விவரம் வருமாறு:

1. ‘லட்சுமி பாம்’. இது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தமிழில் வெளியான மசாலா பேய் ‘காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக். லாரன்ஸ் நடித்த வேடத்தில் அக்‌ஷய்குமார் நடிக்க, கியாரா அத்வானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

2. ‘தில் பேச்சாரா. தற்கொலை செய்து தன்னை மாய்த்துக்கொண்ட ‘தோணி’ பட நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத் நாயகனாக நடித்திருக்கும் கடைசி திரைப்படம். அவருடன் சஞ்சனா சங்கி நுரையிரல் பிரச்சினையால் நிரந்தமாக பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார். முகேஷ் சாப்ரா இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

விக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்!

3. ‘சதக் 2’ பிரபல பாலிவுட் இயக்குநர் மஹேஷ் பட் இயக்கத்தில் பூஜா பட், சஞ்சய் தத், ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம்.1991-ல் வந்த படத்தின் இரண்டாம் பாகம் இது.

4. ‘லூட்கேஸ்’. தமிழ்நாட்டிலிருந்து சென்று பாலிவுட்டில் வளர்ந்து வரும் இயக்குநராக இருக்கும் ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் குணால் கெம்மு நாயகனாக நடித்திருக்கும் படம். இவருடன் கஜ்ராஜ் ராவ், ரசிகா துக்கால், ரன்வீர் ஷோரே, விஜய் ராஸ் என பல வளரும் நடிகர்கள் நடித்துள்ளனர்.

5. ‘குதா ஹாஃபிஸ்’. மதத் தீவரவாதி என முத்திரை குத்தி அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் ஆக்கிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தை பரூக் கபீர் இயக்கியிருக்கிறார். வித்யுத் ஜம்வால், ஷிவலேகா ஓபராய் இணை சேர்ந்துள்ளனர்.

தேவயானியின் கிராமத்து வாழ்க்கை!

6. ‘தி பிக் புல்’ - ஒரு இடைவெளிக்குப்பின் அபிஷேக் பச்சன் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் பல புதிய தொழில் யோசனைகளை வழங்கும் திறமையான ஒருவரைப் பற்றியக் கதை. இதி அபிஷேக் ஜோடியாக இடையழகி இலியானா நடித்துள்ளார். நிகிதா தத் - அஜய் தேவ்கன் என இரண்டு நடிகர்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தை கூகி குலாடி இயக்கயிருக்கிறார்.

7. ‘பூஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ - 200 கோடி வசூல் கிளப்பில் உள்ள அஜய் தேவ்கன் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படமே ஓடிடி தளத்துக்கு வந்துவிட்டது குறித்து பாலிவுட்டில் ஒரே பேச்சாக இருக்கிறது. அஜய் தேவ்கனுடன் சஞ்சய் தத், சோனாக்‌ஷி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அபிஷேக் துதைய்யா இயக்கியிருக்கிறார்.

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து