திரைச்செய்திகள்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

இவர் முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஐபிசி 376’. ராம்குமார் சுப்பாராமன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நந்திதா ஸ்வேதா இரண்டுவிதமான தோற்றங்களில் வருகிறார். அதில் ஒன்று போலீஸ் அதிகாரி. ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில், முதல் முறையாக அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள சூப்பர் சுப்பராயன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியானது. ‘பெண்களை பாலியல் பண்டமாக பாவிக்கும் அரசியல்வாதிகள், போலிச்சாமியார், மூத்த காவல் அதிகாரிகளை அடித்து துவைக்கும் வேடத்தில் நந்திதா நடித்திருப்பதை ட்ரைலர் மூலம் உறுதி செய்துகொள்ள முடிகிறது. பொள்ளாச்சி சம்பவத்தை நினைவூட்டுவதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதை உணரமுடிகிறது.

 

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

வெங்கட் பிரபுவும் சிம்புவும் சினிமா பார்ட்டிகளில் பழகி நண்பர்கள் ஆனவர்கள். இருவரும் கடந்த 2015-ம் ஆண்டிலேயே இணைந்து படம் செய்ய இருந்தனர்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது