திரைச்செய்திகள்

தமிழ் சினிமாவில் உயரமான நடிகர்கள் பலர். அவர்களில் சத்தியராஜ், விஷால் ஆகிய இருவரையும்விட உயரமானவர் நெப்போலியன்.

‘புதுநெல்லு புது நாத்து’ படத்தின் மூலம், இயக்குநர் இமயம், பாரதிராஜாவால் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டவர். அதன்பிறகு, அவரது ஆளுமையை அடையாளப் படுத்திய படங்களில் ஒன்று, ‘சீவலப்பேரி பாண்டி'. பின்னர் கதாநாயகனாகத் தொடர முடியாவிட்டாலும், குணச்சித்திர நடிகராக புகழ்பெற்றார். கடைசியாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த ‘சீமாராஜா’ படத்தில், சிங்கம்பட்டி ஜமீன்தாராக கம்பீரமாக நடித்திருந்தார். அவரது தோற்றமும், நடிப்பு முறையும், தமிழ் ரசிகர்களால் இன்றைக்கும் விரும்பப்படுபவை.

 ஒரு கட்டத்துக்குப் பின், அமெரிக்காவில் குடியேறிய அவர், அங்கு தமிழ்த் தயாரிப்பாளர் ஒருவர் எடுத்துவரும், குறைந்த பட்ஜெட் ஆங்கில திகில் படங்களில் நடித்துவருகிறார். டெவில்ஸ் நைட்’ என்ற தலைப்பில், அவர் நடித்திருக்கும் ஒரு படம் சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியானது. அந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக, இணையம் வழியாக பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தார். அப்போது, தளபதி விஜய் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட விஷயம், பலருக்கும் பகீர் என்று இருந்தது.

காரணம், கடந்த 20 வருடங்களாக, நடிகர் விஜய் மீது, தீராத கோபத்திலும், மன வருத்தத்திலும் நெப்போலியன் இருந்துள்ளார் என்பதை, அவர் பகீரங்கமாகக் கூறிவிட்டார். அப்படி என்னதான் நடந்தது? நடிகர் நெப்போலியன் அப்போது பிஸியாக நடித்துகொண்டிருந்த காலகட்டம். விஜய் ஹீரோவாக நடித்துவந்த ‘போக்கிரி’படத்தில், முகைதீன் கான் என்ற வேடத்தில், அப்போது நெப்போலியன் நடித்து வந்தார். இதை அறிந்த நெப்போலியனின் நெருங்கிய நண்பர்கள் சிலர், விஜய்யின் தீவிர ரசிகர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ‘விஜயுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதற்கு நீங்கள் உதவ வேண்டும்’ என்று கேட்டு, நெப்போலியனைத் தேடி, படப்பிடிப்பு நடந்த ஸ்டுடியோவுக்கே வந்துவிட்டார்கள்.

 அவர்களது ஆசையை நிறைவேற்ற விரும்பிய நெப்போலியன், ‘அவ்ளோ தானே, வாங்க போலாம்’ என்று நண்பர்களை அழைத்துக்கொண்டு, விஜயின் கேராவேன் அருகில் போய், அதன் கதவைத் திறந்துள்ளார். விஜயின் கேராவேனுக்கு வெளியே, காவலுக்கு இருந்த அவரது பாதுகாவலர், நெப்போலியனை தடுத்து, சரமாரியாக கேள்விகளை கேட்டுள்ளார். நண்பர்கள் முன்னிலையில் அவமானப்பட்ட நெப்போலியன், அந்த பாதுகாவலருடன் கை கலப்பில் இறங்க, அந்த இடம் பரபரப்பாகிவிட்டது.

 வெளியே சத்தம் கேட்டதைப் பார்த்து, கேரா வேனிலிருந்து வெளியே வந்த விஜய், விஷயத்தைத் தெரிந்துகொண்டார். உடனே, “சார், உங்களுக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா?” என்று நெப்போலியனைப் பார்த்துச் சொல்ல, மனமுடைந்து போய்விட்டாராம் நெப்போலியன். ‘வயது வித்தியாசம் பார்க்காமல், நடிகர் விஜய் என்னை அப்படி திட்டியதை மறக்க முடியவில்லை. அது ஆறாத வடுவாக ஆகிவிட்டது.’ என்று நெப்போலியன் 20 ஆண்டுகளுக்குப் பின், மனம் திறந்து பேசியிருக்கிறார். விஜய், நெப்போலியன் இருவருமே சிறந்த நடிகர்கள், அவர்களின் மனக்கசப்பு தீரட்டும்.

வெங்கட் பிரபுவும் சிம்புவும் சினிமா பார்ட்டிகளில் பழகி நண்பர்கள் ஆனவர்கள். இருவரும் கடந்த 2015-ம் ஆண்டிலேயே இணைந்து படம் செய்ய இருந்தனர்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது