திரைச்செய்திகள்

‘காதல் கொண்டேன்’ படம் வெளியாகி பதினேழு ஆண்டுகள் நிறைவு பெற்றது தனுஷ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், அதில் கதாநாயகியாக இயக்குநர் செல்வராகவனால் அறிமுகப்படுத்தப்பட்டார் சோனியா அகர்வால். அந்தப் படத்தின் போதே காதலித்து வந்த இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்தனர். ஆனால், செல்வராகவன் தனது படக் கதாநாயகிகளுடனும் பெண் உதவி இயக்குநர்களுடனும் காட்டிய நெருக்கம் குறித்து சோனியா அகர்வாலுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் இருவரும் சட்டப்படி பிரிந்தனர். பின்னர், தனது உதவி இயக்குநரும் சென்னையின் முக்கிய ரியல் எஸ்டேட் பிரமுகரின் மகளுமான கீதாஞ்சலி என்பவரை செல்வராகவன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

பிரிவுக்குப் பின்னர் செல்வராகவுனுடன் தொடர்பில் இல்லாமல் போன சோனியா அகர்வால் அவரது சொந்த வாழ்க்கையில் சாயல் படிந்ததுபோன்ற ‘ஒரு நடிகையின் கதை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இப்போதும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தன்னை தக்க வைத்துக் கொள்கிறார். இதற்கிடையில் கடந்த ஆண்டு தனுஷ் தனது பிறந்த நாள் பார்ட்டிக்கு சோனியா அகர்வாலை அழைத்திருந்தார். அப்போது செல்வராகவன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சோனியா அகர்வாலிடம் பேசி சமாதனம் ஆனார் என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தனது முன்னாள் கணவர் செல்வராகவனுக்கு ‘காதல் கொண்டேன்’ படத்தின் 17-வது ஆண்டினை முன்னிட்டு ட்விட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பதிவில் “கடவுளுக்கும்.. மயக்கும் தமிழ்நாட்டுக்கும், செல்வராகவன் மற்றும் கஸ்துரிராஜாவுக்கும் நன்றி. தமிழகத்தின் பார்வையாளர்களுக்கு இவர்கள் என்னை அறிமுகப்படுத்தி17 ஆண்டுகள் ஆகின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது