திரைச்செய்திகள்

தமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.

அந்த அணிக்கு கேப்டனாக நடிப்பவர் பாலிவுட் சென்சேஷன் ஹீரோ, தீபிகா படுகோனை திருமணம் செய்துகொண்ட ரன்வீர் சிங்.

நடிகர் சூரியின் ஆச்சரியமூட்டும் செல்ல வளர்ப்பு இது!

இன்று ரன்வீர் சிங்கிக்கு பிறந்த நாள் இதையொட்டி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வாழ்த்து தெரிவித்திருக்கும் ஜீவா, அவரை முத்தமிடும் படங்களையும் படப்பிடிப்பு இடைவேளையில் ரன்வீருடன் ஜாலியாக அரட்டை அடிக்கும் படங்களையும் பகிர்ந்துள்ளார். ‘83’ கபீர்கான் இயக்கிவரும் படம் என்பது குறிப்பிடத் தக்கது.

சண்டைக்கோழிகள் விஷால் - மிஷ்கின் இணைகிறார்கள்!

‘83’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாவது பற்றி நம்மிடம் பேசிய ஜீவா “ கபீர் கான் இயக்கத்தில் ‘83’ படத்தில் ஸ்ரீகாந்த்தின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க கிடைத்த வாய்ப்பை மறக்க முடியாது. நான் ஒரு தீவிர கிரிக்கெட் வெறியன். நான் ஏராளமான உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளேன், அவற்றில் சிலவற்றில் வென்றும் இருக்கிறேன். பிரபல கிரிக்கெட் வீரர் சாந்து எனது வேடத்துக்குப் பயிற்சி அளித்தார். என்பதையும் ரன்வீர் என்மீது காட்டும் அன்பையும் மறக்கமாட்டேன்” என்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

வெங்கட் பிரபுவும் சிம்புவும் சினிமா பார்ட்டிகளில் பழகி நண்பர்கள் ஆனவர்கள். இருவரும் கடந்த 2015-ம் ஆண்டிலேயே இணைந்து படம் செய்ய இருந்தனர்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது