திரைச்செய்திகள்

திரைக்கதை திலகம் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் 1980-களில் வெளியானது. அந்தப் படம் வெளியான பிறகு, சீண்டுவாரில்லாத முருங்கைக்காய் விற்பனை தமிழகம் முழுவதும் ஏற்றம் பெறத் தொடங்கியது.

இப்போது, பாக்யராஜின் வாரிசு சாந்தனு அப்பா வழியில் தப்பாமல் தனது பயணத்தை தக்க வைத்துக்கொள்ள ‘முருங்கக்காய் சிப்ஸ்’ என்ற படத்தில் ‘நாட்டி’ நாயகனா நடிக்கிறார். படத்தின் தலைப்புக்கு கீழே 100% நாட்டி, 100% டேஸ்டி என்று துணைத் தலைப்பு போட்டு வில்லங்கத்தை விற்பனை செய்ய வருகிறார்கள். ஸ்ரீஜர் இயக்கவிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அப்பா கே. பாக்யராஜும் மகனுடன் இணைந்து நடிக்கிறார் என்பது ஸ்பெஷல். ‘லிப்ரா’ பிலிம்ஸ் நிறுவனம் மூலம் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கிறார்.

அஜித் படத்துக்கு விஜய் கொடுத்த விருந்து!

சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்க, யோகி பாபு, மனோபாலா, ரேஷ்மா பசுபுலாட்டி, மதுமிதா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைக்க தரன்குமார் குறும்பு இசையை வழங்கப் போகிறாராம். இசையமைப்பாளர் தாரன் தனது ட்விட்டர் பதிவில் “இந்த படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனென்றால் நான் எனது குருவுடன் வேலை செய்யப் போகிறேன், எனது வழிகாட்டி கே பாக்யராஜ் சார். பல திறமைகளின் சங்கமம் என்றால் அது சாந்தானு. அவருக்காப் பணிபுரிவது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!” என்று தெரிவித்திருகிறார். ‘முருங்கைக்காய் சிப்ஸி’ன் முதல் தோற்றத்தை சாந்தனு பகிர்ந்துள்ளதுடன் “ இது வாண வேடிக்கையாக இருக்கும்” என்று அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார். படம் வெளியானல் முருங்கைக்காய் விலை மறுபடியும் விலையேறினாலும் ஏறும். இன்னொன்று.. இந்தப் படத்தைப் பார்த்தால் அப்படியே ஓடிடி முகக் களை தெரிகிறதே!

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

வெங்கட் பிரபுவும் சிம்புவும் சினிமா பார்ட்டிகளில் பழகி நண்பர்கள் ஆனவர்கள். இருவரும் கடந்த 2015-ம் ஆண்டிலேயே இணைந்து படம் செய்ய இருந்தனர்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது