திரைச்செய்திகள்

அரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக 'அமைதிப்படை' தொடங்கி பல படங்களைக் கூறலாம். . அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'.

டெல்லி பிரசாத் தீனதயாளன் தனது இயக்குநர் பயணத்தை அரசியல் களம் மூலம் தொடங்குகிறார். எப்போதுமே ஹீரோ என்ற இமேஜுக்குள் சிக்காமல் இருக்கும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். எதிலும் புதுமை விரும்பியான பார்த்திபன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'நானும் ரவுடிதான்' படத்துக்குப் பிறகு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - பார்த்திபன் கூட்டணி இந்தப் படத்தின் இணைகிறது. இந்த கூட்டணி மீண்டும் வெற்றிக் கோட்டைத் தொட தயாராகி வருகிறார்கள்.

இதில் அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளது. இதர படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தா இசை என பிரம்மாண்ட கூட்டணியுடன் இந்தப் படம் தயாராகிறது. 'துக்ளக் தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சன் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தை 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளரும், 'கோப்ரா', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'சீயான் 60' உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுயோஸ் லலித் குமார் 'துக்ளக் தர்பார்' படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

நடிகர், நடிகைகளுக்கு யோகா ஆசிரியை ஆக இருந்த அனுஷ்காவை ஒரு நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் உருவாக்கிய படம் கடந்த 2009-ம் ஆண்டு

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.