திரைச்செய்திகள்

இலங்கையில் கோரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதால் அங்கே திரையரங்குகள் கடந்த 7 நாட்களுக்கு முன்பே திறக்கப்பட்டுவிட்டன.

இலங்கையில் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு அங்கே விக்ரம் பிரபு நடித்த ‘அசுரகுரு’ திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இதேபோல சிங்கப்பூரிலும் வெளியாகியிருக்கிறது. சிங்கப்பூரில் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு அஜித் - நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’ அங்கே தற்போது மீண்டும் ரிலீஸாகியிருக்கிறது. இந்தப் படம் கடந்த 2019 ஆம் ஆண்டில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ போன்ற படங்களுக்குப் பிறகு, சிறுத்தை சிவா ‘விஸ்வாசம்’ படத்தை இயக்கியுள்ளார். டி. இமான் படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார். மேலும் இது யோகி பாபுவின் 100 வது படம்.

 தமிழ்நாட்டிலிருந்து எதற்காக ஒரு ஓடிடி? : சி.வி.குமார்.

இதே தலைப்புடன் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட இந்தப் படம் 2019 மார்ச் 1 அன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 450 திரையரங்குகளில் வெளியாகி 95 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது. விஸ்வாசம் படத்தை ‘ஜகமல்லா’ என்ற தலைப்புடன் கன்னடத்தில் டப் செய்து 7 மார்ச் 2019 அன்று ரிலீஸ் செய்ய அங்கே 26 கோடி வசூல் எடுத்தது.

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்

ஆந்திரா கர்நாடகாவில் அஜித்தின் படங்களில் பெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தினை தற்போது மலேசியா - சிங்கப்பூரி கோரான ஊரடங்கு தளத்தப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் வெளியிட்டிருப்பது அங்கே அஜித் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

வெங்கட் பிரபுவும் சிம்புவும் சினிமா பார்ட்டிகளில் பழகி நண்பர்கள் ஆனவர்கள். இருவரும் கடந்த 2015-ம் ஆண்டிலேயே இணைந்து படம் செய்ய இருந்தனர்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது