திரைச்செய்திகள்

இயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு , ராஷ்மிகா கோபிநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் காக்டெய்ல். இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான பிஜி முத்தையா தயாரித்திருக்கிறார்.

படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனதில் இருந்தே படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருது. தமிழ்க் கடவுளான முருகனின் தோற்றத்தில் யோகி பாபு இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருந்தார்கள். தற்போது காக்டெய்ல் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கவில்லையாம். இதுவரை 10 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே உலகம் முழுவதும் பார்த்திருப்பதாகவும், ஏர்டெல் இணைப்பு வந்திருப்பவர்களுக்கு இலவசமகா இந்தியாவில் ஜீ5 கொடுக்ப்பட்டும் யாரும் அந்தப் படத்தில் இலவசமாகக் கூடப் பார்க்கவரவில்லை என நம்பகமான ஜீ5 வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்து ஆண்டுகளுக்குப் பின் கெத்துக்காட்டும் ஜோடி!

படத்துக்கு எதிர்மறையாக வெளியான விமர்சனங்களும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் படம் பார்த்து விமர்சனம் எழுதிய நெட்டிசன்கள் பலரும் ‘யோகி பாபுவின் பெயரை வைத்து ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள்’ என்று சமூகவலை விமர்சனம் செய்து வரும் சூழ்நிலையில், ‘ரசிகர்களை ஏமாற்றியதற்கு யோகிபாபு வருத்தம்’ தெரிவித்துள்ளார். காக்டெய்ல் படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக 10 நாட்கள்தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ரசிகர்கள் எடுத்த சபதம்!

ஆனால் தயாரிப்புத் தரப்பினர் படத்தின் ஹீரோ என்பது போல விளம்பர வேலை செய்து இது யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதைப் போல் வெளியில் காட்டிவிட்டார்கள் என்று புலம்பியிருக்கிறார். இதனால் தன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததால் வருத்தப்பட்டிருக்கிறார். பல படங்களில் நட்புக்காக அவர்கள் கேட்பதால் நடித்துக் கொடுக்கிறேன். பல படங்களில் காமெடியனாக நடிக்கிறேன். வெகு சில படங்களிளே கதையின் நாயகனாக தேர்வு செய்து நடிக்கிறேன். அப்படி இருக்கும் சூழ்நிலையில் தன் பெயரை வைத்து பப்ளிசிட்டி செய்து ஹீரோ இமேஜைக் காட்டி ரசிகர்களை ஏமாற்றிவதி வேதனையாக இருப்பதாக யோகிபாபு தெரிவித்திருக்கிறார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது