திரைச்செய்திகள்

கடந்த ஆண்டு அதிக திரைப்படங்களில் நடித்த கதாநாயகன் விஜய்சேதுபதி. கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாவிட்டாலும் அவரே அதிக எண்ணிக்கையில் படங்களை ஒப்புக்கொண்டுவருகிறார்.

மேலும் அவர் காதும் காதும் வைத்தாற்போல் தொடங்கப்பட்டு பாதியளவு படப்பிடிப்பு முடிந்த படங்களை இப்போது அறிவித்து வருகிறார்கள். அப்படியொரு படம்தான் விஜய்சேதுபதி அரசியல்வாதியாக நடித்திருக்கும் ‘துக்ளக் தர்பார்’. புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கி வரும் இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் பாசத் தங்கையாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்

அப்படியானால் விஜய்சேதுபதிக்கு யார் ஜோடி என்று கேட்டால் அதிதி ராவ். இவர்களுடன் பார்த்திபன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி - பார்த்திபன் கூட்டணி இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப் படத்துக்கு ‘96’ படத்தின் முலம் புகழ்பெற்ற கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது