திரைச்செய்திகள்

மலையாளத்தில் பிரேமம் படத்தில் தன்னம்பிக்கை பொங்கும் இளம் ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் சாய்பல்லவி.

அந்தப்படத்தில் மலர் டீச்சராக நடன போட்டியில் கலந்து கொள்ள தனது மாணவர்களுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கும் துடிப்பான பெண்ணாக இருந்து பிறகு விபத்தில் தனது நினைவுகளை மொத்தமாக இழந்துவிடும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தது.

பரிதாபங்கள் பட்டியலில் ‘பிக்பாஸ் சீசன் 4’

அந்தப் படத்தைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக மாறினார். தனுஷ் ஜோடியாக மாரி 2 படத்தில் அவர் ஆடிய ரவுடி பேபி ஆட்டம் உலகம் முழுவதும் பிரபலமானது. சாய் பல்லவி டிவி நடன நிகழ்ச்சியில் ரியாலிட்டி ஷோ போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். இதைத்தொடர்ந்து சினிமாவிற்கு வந்தார். தற்போது இவரது நடன திறமை தென்னிந்திய திரை உலகில் பேசப்படும் ஒன்றாகி விட்டது.

சத்தியராஜின் 42 வருட சினிமா சர்க்கஸ்!

இவர் கதாநாயகியாக நடிக்கும் படங்களிலும் இவரை நடன இயக்குநராக வேலை செய்யக் கேட்டு அன்புத்தொல்லை கொடுத்து வருகிறார்கள். சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருகிறார். அந்தப் படத்துக்கு லவ் ஸ்டோரி என்று தலைப்பிடப்பட்டிருக்கிறார்கள். இயக்குநரின் வேண்டுக்க்கோளை ஏற்று அந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார் சாய் பல்லவி. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் அவரது ‘டபுள்’ ட்ரீட்டை வெள்ளித்திரையில் கண்டு மகிழலாம்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது